யாருன்னு தெரியாது, விவாகரத்து நோட்டீஸ் எதற்கு? சின்ன மருமகள் சீரியல் நடிகை காதலன் வைத்த ஆப்பு

By ·

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் தொடங்கும் போது தான் ஆதி என்பவரை காதலிப்பதாக கூறியிருந்தார். பின் அவர் யார்? என்பதை சோசியல் மீடியாவில் அறிவிக்கவே இல்லை.
இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவின் காதலர் ஆதி, எனக்கும் ஸ்வேதாவுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடந்து விட்டது.

அதை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறோம் என்றார். இதை அடுத்து ஸ்வேதா, எனக்கும் ஆதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் யார் என்று தெரியவில்லை? அவர் சொல்வதெல்லாம் பொய் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்வேதா, ஆதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக ஆதி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என் பெயர் ஆதி. நடிகை ஸ்வேதாவின் கணவர், சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் நான் அளித்த பேட்டியில், நான் தான் அவர்களின் கணவர் என்பதையும் தெரிவித்திருந்தேன். அதற்கு பின்னர், ஸ்வேதா அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்னை அவருக்கு தெரியாது.

ஆதி-ஸ்வேதா சர்ச்சை:

அவர் கூறுவது பொய்; என்று பல குற்றச்சாட்டுகளுடன் பதிவு வெளியிட்டிருந்தார்கள். ஒருவர் தெரியவில்லை என்றால், எப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடியும்? ஆனால் எனக்கு அவர்களிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸிலும் என்னைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்தது - அவர்கள் என் மனைவி என்பதாலும், ஒரு பெண்ணை பொது இடத்தில் அவமதிக்கக் கூடாது என்ற மரியாதையாலும் தான்.

https://www.youtube.com/watch?v=i8HSs2Q_vGY

ஆதி பதிவு:

மேலும் ஒருநாள் அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் காத்திருந்தேன். இதுவரை நடந்த பிரச்சனைகளில் தவறு என்னிடமே இருக்கலாம் என்று நினைத்து பல நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் சமீப காலத்தில் சில உண்மைகள் எனக்கு தெரிய வந்தது. அவர்களின் செயல்களால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் வழங்கிய ஆதாரங்களை பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. அவளை மதித்ததாலேயே என்னிடம் இருந்த சில முக்கிய ஆதாரங்களை வெளியிடாமல் வைத்திருந்தேன்.

View this post on Instagram

A post shared by Adhi Swetha (@adhiofficial07)

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

அந்த விஷயங்களை இன்றும் முழுமையாக வெளியில் கூற விருப்பமில்லை. மேலும் என்னைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. இதனால் என் தொழிலும் தனிப்பட்ட ன் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதுடன், நான் கடுமையான மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளேன். இந்த அறிக்கையின் முக்கிய நோக்கம் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை தெளிவுபடுத்துவது தான்.
விவாகரத்து தொடர்பாக, நான் கொடுமை செய்தேன் என்று கூறி அளிக்கப்பட்ட புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை விரைவில் சட்ட ரீதியாக நிரூபிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை