அவன் பெரிய ஃபிராடு, என் பெயரை கெடுக்க இப்படி பண்ணுறான் - சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா குமுறல்

By subhashini · 25/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் சின்ன மருமகள்.
இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் ஹீரோ சேது, ஹீரோயின் தமிழ்செல்வி இருவருமே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், ஹீரோயினிக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இருந்தாலுமே பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணத்திற்கு பிறகு தன் கணவரை புரிந்து கொண்டு தமிழ் அவருடன் சேர்ந்து வாழ்கிறார். பின் ஒரு கட்டத்தில் தமிழ்ச்செல்வி அறியாமல் செய்த தவறால் சேது அவர் மீது கோபப்படுகிறார். பின் தமிழ், கர்ப்பமாக இருப்பதாக நாடகம் ஆடியதால் சேது அவரை விட்டு பிரிந்து விவாகரத்து கேட்கிறார். தற்போது தமிழ்செல்வி உண்மையில் கர்ப்பமாக இருக்கிறார். இருந்துமே சேது அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ரொம்ப கோர்ட்டில் சேது- தமிழ் விவாகரத்து நடக்கிறது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று அப்பத்தா போராடிக் கொண்டிருக்கிறார். இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் தான் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சின்ன மருமகள்:

மேலும், இந்த சீரியலில் தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் தொடங்கும் போது தான் ஆதி என்பவரை காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால், அவர் யார்? என்பதை சோசியல் மீடியாவில் அறிவிக்கவே இல்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சமீபத்தில் தான் ஸ்வேதாவின் காதலர் ஆதி என்று ஒரு நபர் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், எனக்கும் ஸ்வேதாவுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடந்து விட்டது. ஆனால், அதை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறோம் என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி இணையத்தில் மிக வைரலாக பரவியது.

https://youtu.be/i8HSs2Q_vGY?si=_ns0rAdvRhgCONy_

ஸ்வேதா காதலர்:

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஸ்வேதா கோபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட நபர் தன்னை என்னுடைய கணவர் என்று பொது இடங்களில் கூறியிருக்கிறார். அவர் ஒரு பிராடு என்பதை தெரியப்படுத்துகிறேன். அவருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறை அவரை தேடிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் என்னுடைய பெயரை பயன்படுத்தி நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்றெல்லாம் பொய்யான கதையை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். துரதிஷ்டவசமாக நான் அவரை மிகவும் நம்பி இருந்தேன். ஆனால், பின்னல்தான் அவருடைய உண்மையான முகம், குற்ற செயல்கள் எல்லாம் தெரிந்தது .

View this post on Instagram

A post shared by Swetha (@swetha.officiall)

ஸ்வேதா அறிக்கை:

தற்போது அவரால் என்னுடைய எதிர்காலம் கெடாமல் இருப்பதற்காக சட்ட நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகிறேன். நாங்கள் முழுவதுமாக பிரிந்து விட்டோம். இருந்தாலும் என்னுடைய அமைதி இல்லாமல் அவர் என்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவிலும் பேட்டிகளிலும் பயன்படுத்தி வருகிறார். நாங்கள் இன்னும் சேர்ந்திருப்பதாக காட்டி தவறான கதைகளை கட்டுகிறார். இதன் மூலம் அவர் மக்களிடையே பரிதாபத்தை பெறவும் என்னுடைய பெயரைக் எடுக்கவும் தான் முயற்சி செய்கிறார்.

ஸ்வேதா கோபம்:

எனக்கு அவருடன் இனி எந்தவித தொடர்பும் இல்லை. யார் இவருக்கு ஆதரவளித்தாலும் அல்லது என் பெயர் புகைப்படங்கள், படங்களை தவறாக பயன்படுத்தி உதவினாலும் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். என் மீது பழி போட முயன்றாலும், உண்மையை மாற்றி பேசினாலும் அவர்களை நான் சும்மா விடமாட்டேன். நான் மனதளவிலும் உடல் நிலைமையிலும் ரொம்ப கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். இவற்றையெல்லாம் தனியாக சமாளித்தாலும் இந்த கடுமையான நேரத்தில் என்னுடைய குடும்பம் எனக்கு துணையாக இருந்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தேவையற்ற வதந்திகள் அல்லது நாடகங்களை ஊக்குவிக்காமல் இருக்கவும் என்னுடைய நிலைமையை புரிந்து கொள்ளவும் உங்களுடைய ஆதரவுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full