ஐஸ்வர்யா செய்த வேலையால் கொந்தளித்த ராஜாங்கம், தமிழ் கொடுத்த பதிலடி - பரபரப்பில் சின்ன மருமகள்

By subhashini · 30/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் லட்சுமி, தமிழ்ச்செல்வி இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். தமிழ்ச்செல்வி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததையும் பெண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் ரொம்பவே உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டு சேதுவிற்கு பயங்கர கோபம் வருகிறது. தமிழையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார். பின் இதைப்பற்றி ராஜாங்கத்திடம் சொல்லி சேது புலம்பினார்.

ராஜாங்கம், எது நடந்தாலும் நாம் நேர்மையாகவும் மக்களுக்கு நல்லது செய்யணும், பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஐஸ்வர்யா, சேதுவின் மனதில் இடம் பிடிக்க அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யப் போனார். ஐஸ்வர்யா பிரச்சாரம் செய்வதை பார்த்து தாமரையுமே பிரச்சாரம் செய்தார். இருவரும் எல்லோரின் காலில் விழுந்து ஓட்டு கேட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் தமிழின் அம்மா, இந்த தேர்தல் தேவையா? மாப்பிள்ளை வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்றார். தமிழ்செல்வி, எது நடந்தாலும் பெண்களுக்காகவும் எனக்காகவும் போராட போகிறேன் என்றார்.

சின்ன மருமகள்:

தேர்தலுக்காக தமிழ்செல்வி மும்முறமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அதேபோல் சேதுவுமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக செய்து கொண்டிருந்தார். பின் சேது, என்னை எதிர்த்து நீ ஜெயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். தமிழ்செல்வி, எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவில் தெரிந்து விடும். உங்களிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் ஒவ்வொரு வீடாக சென்று தமிழ்செல்வி ஓட்டுகளை சேகரித்தார். சேதுவுமே தன்னுடைய அப்பா செய்த பெருமைகளைப் பற்றி எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தேர்தல் பற்றி ராஜாங்கம் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்செல்வியை பற்றி ரொம்பவே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ராஜாங்கம், நானே பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தமிழ் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது தமிழை சந்தித்து ஈஸ்வரி- ஐஸ்வர்யா இருவரும் பேசுகிறார்கள். ஐஸ்வர்யா ரொம்பவே தரகுறைவாக தமிழை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

ஈஸ்வரியும் மோசமாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, தமிழை அடிக்கப் போகிறார். இதையெல்லாம் பார்த்த தமிழின் தோழி வீடியோ எடுத்து விடுகிறார். பின் இதைப்பற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து தமிழ் செல்விக்காக ஓட்டு கேட்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த ராஜாங்கம், எதற்காக இப்படி செய்தீர்கள் என்று ஐஸ்வர்யாவை கேட்கிறார். அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கப்படுகிறார். இருந்தாலும் ராஜாங்கம் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று திட்டி விட்டு செல்கிறார். சேது,தமிழுக்கு போன் செய்து கடுமையாக பேசுகிறார். மறுநாள் தேர்தல் நடக்கிறது. எல்லோருமே ஓட்டு போடுகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full