கால் உடைந்த நிலையிலும் தேர்வு எழுத போகும் தமிழ்செல்வி, சேது சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 11/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி தன்னுடைய மகளுடன் சேர்ந்து தமிழ் வரும் வழியில் ஒரு பள்ளம் தோண்டி அது மேல் அவர் கால் வைத்து கீழே விழுந்து கர்ப்பம் கலையுமாறு ஏற்பாடு செய்தார். ஆனால், அதிலிருந்தும் தமிழ் தப்பித்து விட்டார். பின் வீட்டில் நடந்து வரும் போது தெரியாமல் தமிழ் ஸ்லிப் ஆகி விழுந்து விட்டார். உடனே வழி தாங்க முடியாமல் தமிழ் கத்திக் கொண்டிருந்தார். இதை பார்த்த சேது பதறி போய் தமிழை ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு சொன்னார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, தாமரை அம்மா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.

நேற்று எபிசோட்டில் சேது, தமிழை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார். அப்போது செக் பண்ண டாக்டர், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வதா? எதுவாக இருந்தாலும் ஸ்கேன் செய்து விட்டு தான் சொல்லுவோம். கீழே விழுந்ததில் கரு கலைந்து இருக்கிறதா? என்று தெரியவில்லை என்று சொல்வதால் சேது ரொம்பவே பயந்தார். பின் தகவல் அறிந்து சேது வீட்டில் உள்ள எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்கள். தமிழின் அப்பா, அம்மாவும் வந்து ரொம்பவே பதறினார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

பின் சேது, கடவுளிடம் தமிழுக்காக வேண்டினார். அதற்குப்பின் தமிழை ஸ்கேன் செய்த பிறகு டாக்டர், குழந்தைக்கு எந்த பிரச்சினை இல்லை. தமிழ் நன்றாக இருக்கிறார். ஆனால், அவருடைய காலில் அடிபட்டு இருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்கள் தமிழ் ரெஸ்ட் எடுக்கணும் என்றார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், சேது எதுவும் சொல்லவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழிடம் பேச சொல்லி எல்லோரும் சேதுவை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், சேது முடியாது என்று ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த சேதுவிடம் தமிழ் பற்றி விசாரிக்கிறார்கள். தமிழுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தவுடன் ஈஸ்வரி கோபப்படுகிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அப்போது தமிழ்செல்வி, நடக்கக்கூடாது என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதற்கு தமிழ்செல்வி, எனக்கு எக்ஸாம் இருக்கிறது. நான் கண்டிப்பாக போவேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்பத்தா, சேதுவை அழைத்துப் போக சொல்கிறார். ஆனால், சேது முடியாது என்று மறுத்து விடுகிறார்.
அதற்குப் பின் ஈஸ்வரிக்கு போன் செய்த போஸ், நான் ராஜாங்கத்தை அபழிவாங்காமல் விடமாட்டேன். ஆறுமுகத்தை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு ராஜாங்கத்திடம் அப்பத்தா, தமிழுக்கு நடந்ததை பற்றி சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சேது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழும் சாப்பிடுவதற்காக போகிறார். ஆனால், அவரால் போட முடியவில்லை. உடனே சேது உதவி செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full