தமிழ்-சேதுவை சேர்த்து வைக்க போராடும் அப்பத்தா, ஹனிமூன் போகும் கண்மணி, ஆறுமுகம் - சின்ன மருமகள்

By subhashini · 19/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஹோட்டல் ஓனர், தமிழ்செல்வியை பார்த்து இனிமேல் இந்த இடத்தில் வேலை செய்ய தேவையில்லை. ஒழுங்கு மரியாதையாக கிளம்பு. உனக்கு சம்பளமலம் கொடுக்க முடியாது என்று திட்டி அனுப்பி விட்டார். பின் அந்த ஓனரை சந்தித்த அப்பத்தா, அவள் யார் தெரியுமா? அமைச்சர் மருமகள். அவளை மரியாதையாக நடத்து என்று சொன்னார். இதனால் அந்த ஓனர் ஆடிப் போய் மீண்டும் தமிழ்செல்வியை வேலைக்கு சேர்த்து கொண்டார். இன்னொரு பக்கம் கொட்டைக்கு போக ஈஸ்வரியும் அவருடைய மகளும் வேதனையில் புலம்பி கொண்டிருந்தார்கள் .

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தமிழ்செல்வியை பார்த்தவுடன் ஈஸ்வரி சண்டைக்கு போனார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி இருக்கும் இடத்திற்கு கண்மணி-ஆறுமுகம் வந்தார்கள். சந்தோஷமாக தமிழ் செல்வி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சேது, கண்மணி பார்த்து சந்தோஷப்பட்டார். அப்போது தமிழ்செல்வி, ஆறுமுகத்தை மாப்பிள்ளை என்று மரியாதையாக உறவு முறைப்படி கூப்பிடுங்கள் என்று சொல்வதால் சேதுவுமே அப்படியே கூப்பிட்டார்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் சேது- தமிழ் இருவரும் ஜோடியாக சேர்ந்து கண்மணி, ஆறுமுகத்தை ஆசிர்வாதம் செய்தார்கள். அதற்குப்பின் கண்மணி, ஆறுமுகம் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். இன்னொரு பக்கம் கொசு தொல்லை தாங்க முடியாமல் ஈஸ்வரியும் அவருடைய மகளும் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். இன்னொரு பக்கம் சேது, என் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. நீ உண்மையை சொல்லவில்லை என்றால் என் தங்கையின் வாழ்க்கை என்னாயிருக்குமோ என்று சொன்னார். அதற்கு தமிழ்ச்செல்வி, கண்மணி என்னை அன்பாகத்தான் பார்க்கிறார்.

நேற்று எபிசோட்:

அவளுடைய நான் கஷ்டப்பட விட மாட்டேன் என்று சொன்னார். உடனே சேது, என்னிடம் சொல்ல வேண்டியது தானே என்றார். அதற்கு தமிழ்ச்செல்வி நக்கலாக பேசி இருந்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா, கண்மணியின் திருமணத்தை பற்றி கேட்டார். தமிழ்செல்வி நடந்த எல்லாத்தையும் சொன்னார். அதற்குப்பின் ஆறுமுகத்திற்கு ராஜாங்கம் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள எல்லோருமே மரியாதை கொடுத்தார்கள். வேலைக்காரன் என்று பார்க்காமல் தங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆகவே நினைக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், பர்னிச்சர் கடையை இனிமேல் நீங்கள் தான் பார்க்க வேண்டும். போகப்போக உங்களுக்குமற்ற வியாபாரத்தை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம் என்கிறார். இதை கேட்டு கண்மணி-ஆறுமுகம் சந்தோஷப்படுகிறார்கள். அப்பத்தா, இதற்கெல்லாம் காரணம் தமிழ்செல்வி தான். தமிழ் செல்வியால்தான் நம் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்று பெருமையாக பேசுகிறார். அதன் பின் கண்மணி-ஆறுமுகத்தை ஹனிமூன் அனுப்பி வைக்கிறார்கள். மொத்த வீடும் சந்தோசமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

பின் சேதுவை பார்த்த அப்பத்தா, தமிழ்ச்செல்வியை ஏற்றுக்கொள். விவாகரத்து எல்லாம் வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமாக வாழுங்கள் என்கிறார். அதற்கு சேது, குழந்தை விஷயத்தில் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நான் அவளுடன் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம் என்கிறார். இன்னொரு பக்கம் ஹோட்டலின் ஓனர், தமிழ் செல்வியை மரியாதையாக நடத்துகிறார். பின் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தமிழ், தங்கி இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுக்கிறார். அப்பத்தா, வேண்டாம் என்று சொல்லியும் தமிழ் கேட்கவில்லை பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full