ராஜாங்கத்தின் உறவை முறித்து கொண்ட அப்பத்தா, கதறும் தமிழ்செல்வி - பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஐசு, நான் சேது மாமாவை கல்யாணம் செய்து கொள்ள தயார் என்றார். சேதுவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து சேது கிளம்பி விட்டார். அதற்குப்பின் ஈஸ்வரி, சேதுபதி தனியாக சந்தித்து ஐஸ்வர்யாவை பற்றி பேசி இருந்தார். அதோடு சேதுவுக்காக ஐஸ்வர்யா கோவிலில் வேல் குத்திய விஷயத்தை எல்லாம் சொல்லி வீடியோவாக ஈஸ்வரி காண்பித்தார். அதை பார்த்து சேதுவின் மனம் மாறுகிறது.
இன்னொரு பக்கம் தமிழ் நடத்தும் ஹோட்டலில் சில ரவுடிகள் சாப்பிட வந்திருந்தார்கள். அவர்கள் தமிழ்செல்வியின் தங்கையை ரொம்ப கிண்டலாகவும் மோசமாகவும் பேசி இருந்தார்கள். இதை கவனித்த தமிழ்செல்வி, அவர்களின் கைகளை கிழித்து திட்டி எல்லோரையும் ஓட வைத்தார். அதற்குப்பின் ஐஸ்வர்யா, சேதுவை சந்தித்து பேசி இருந்தார். ஐஸ்வர்யா தன் மனதில் இருக்கும் காதலை வெளிப்படையாக சேதுவிடும் சொல்லி விட்டார்.
சின்ன மருமகள்:
இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், திருமணத்திற்கு நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்கிறார். சேது, நடந்திருக்கும் விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போது நான் ஐசுவை திருமணம் செய்து கொள்கிறேன். அவள் என்னை ரொம்பவே காதலிக்கிறார். இந்த குடும்பத்திற்காகவும் நிறைய நல்லது செய்து இருக்கிறாள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சாவித்திரி- தாமரை இருவருக்கும் பயங்கரமாக கடுப்பாகிறது. ஐஸ்வர்யா, ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் ஐஸ்வர்யாவின் அப்பா- அம்மா இருவரையும் வீட்டிற்கு வரவைக்கிறார்கள். திருமணத்தைப் பற்றி ராஜாங்கம் பேசுகிறார். ஐசுவின் அப்பா, நாளைக்கு நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
ராஜாங்கம், நாளைக்கு எப்படி முடியும் என்று கேட்கிறார். ஐசு அப்பா, நீங்கள் திடீரென்று மனம் மாறி ஏதாவது நடந்து விட்டால் என் மகளின் வாழ்க்கை என்ன ஆகுவது? நாளைக்கு நிச்சயதார்த்தம் முடித்துவிடலாம். அதற்குப்பின் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இதனால் ராஜாங்கம்-சேது இருவரும் ஒத்துக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு போகும்போது விபத்து ஏற்பட்டு நான்கு பேர் சீரியஸான நிலையில் இருக்கிறார்கள். தமிழ், அவர்களுக்கு முதலுதவி செய்கிறார். பின் அவர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் அந்த சின்ன பெண்ணின் உயிரை தமிழ்ச்செல்வி காப்பாற்றி விடுகிறார். மீதி பேருடைய உயிரை காப்பாற்ற தமிழ் போராடிக் கொண்டிருக்கிறார்
https://www.youtube.com/watch?v=KdEze44ODiQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் கோவிலில் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது கொந்தளித்த அப்பத்தா, இப்படி ஒரு அக்கிரமத்தை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை அறுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வருகிறார். பின் தமிழ்ச்செல்வி இடம் ரொம்ப எமோஷனலாக பேசி அப்பத்தா அழுகிறார். தமிழ்செல்வியும் தன்னுடைய அப்பத்தாவை கட்டி அணைத்து ஆறுதல் சொல்கிறார்.