தீபாவளி கொண்டாட அப்பத்தா வைத்த கோரிக்கை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, 12 மணி ஆக இருப்பதால் தமிழ்ச்செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். தமிழ்செல்வி, சேதுவிற்கு நன்றி சொன்னார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி, கல்லூரிக்கு சென்றிருக்கும்போது ஜெனியின் வீட்டில் காதல் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சனை செய்கிறார்கள். இதனால் ஜெனி ரொம்பவே எமோஷனலாக அழுது புலம்பி கொண்டிருந்தார். அதற்குப்பின் மலர், வீட்டை விட்டு கிளம்புவதாக சொன்னார். ராஜாங்கம், அமைதியாக இருந்தார்.
ராஜாங்கம், நீ இந்த வீட்டு மருமகள் தான். யாருக்கு கல்யாணம் ஆனாலும் நீ இந்த வீட்டு மருமகள் என்பதை யாராலும் மாற்ற முடியாது. நீ இங்கேயே இரு என்று சொல்வதால் மலர் சந்தோஷப்பட்டார். அதற்குப் பின் ராஜாங்கம், தன்னுடைய கட்சிக்காரர்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழ்ச்செல்வி வேலை செய்யும் ஹோட்டலுக்கு ராஜாங்கம் சென்றார். அங்கு தமிழ்செல்வி இருப்பதை பார்த்து ராஜாங்கம் ஷாக் ஆனார். தமிழ்ச்செல்வி பயத்தில் அமைதியாக இருந்தார்.
சின்ன மருமகள்:
தமிழ்செல்வி, எல்லோருக்கும் டீ கொடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து ராஜாங்கவிற்கு கோபம் அதிகமாகின்றது. பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தமிழ் ஹோட்டலில் வேலை செய்வதை பற்றி சொல்லி கொண்டிருந்தார். அப்போது அப்பத்தா, அவள் செய்யும் வேலை ஒன்னும் தவறு கிடையாது. தன்னுடைய சொந்தக் காலிலே நின்று சுயமரியாதையை விடாமல் சம்பாதித்து தன்னுடைய லட்சியத்திற்காக போராடிக் கொண்டிருந்தார். அவள் செய்வது சரிதான் என்று அப்பத்தா சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது தமிழ்ச்செல்வி, எனக்கு இப்போதெல்லாம் பசி அதிகமாக இருக்கிறது. குழந்தையுடைய அசைவு தெரிகிறது என்று ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய தங்கையிடம் பேசுகிறார். தனமுமே தமிழின் வயிற்றில் கையை வைத்து பார்த்து சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் சேது பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷயத்தை தமிழ், தனத்திடம் சொல்கிறார். உடனே தனம், சேதுவிடம் வம்பு இழுத்து சண்டை வாங்குகிறார்.
அதற்குப்பின் மலர், தமிழ் தங்கி இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது மலர், போஸுக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது. என்னால் அங்கு இருக்க முடியவில்லை என்று ரொம்ப எமோஷனலாக சொல்லி புலம்புகிறார். இதைக் கேட்ட தமிழ், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் அப்பத்தா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தீபாவளி கொண்டாடுவதை பற்றி பேசுகிறார். அப்போது அப்பத்தா, குடும்பமாக சேர்ந்து கொண்டாடலாம். இதில் தமிழ்செல்வியும் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார். வழக்கம் போல ஈஸ்வரி நக்கலாக பதில் சொல்கிறார். அப்போது ராஜாங்கம், சேதுதான் எதுவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் முடிவெடுக்கணும் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது