குழந்தைகளை மாற்றி கொள்ளும் சேது-தமிழ்செல்வி, ஐஸ்வர்யா சொன்னது - சின்ன மருமகள்

குழந்தைகளை மாற்றி கொள்ளும் சேது-தமிழ்செல்வி

By subhashini · 19/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, என்னுடைய அம்மா தான் மகளாக பிறப்பதாக கனவில் சொல்லுவார். என் மகளை பார்க்க வேண்டும். அவருக்கு என்னுடைய பாசம் வேண்டும் என்றார். பஞ்சாயத்தில், வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்குமே உங்கள் இருவரின் பாசம் கிடைக்க வேண்டும் என்றார்கள். சேது ஒத்துக்கொண்டார். ஆனால், தமிழ் செல்விக்கு விருப்பமில்லை. இருந்தாலும் எதுவும் பேசாமல் தன்னுடைய மகளை எடுத்துக்கொண்டு சென்றார்.

இதற்கெல்லாம் காரணம் அப்பத்தா என்பதால் தமிழ் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகன் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார். சேது, குழந்தையை பார்த்துக்க சொல்லி குளிக்க போனார். ஆனால், ஐஸ்வர்யா குழந்தையை கண்டு கொள்ளாமல் பாட்டு கேட்டு இருந்தார். இதனால் கொந்தளித்த சேது, ஐஸ்வர்யாவை அடித்து விட்டார். அதற்கு பின் தமிழ்ச்செல்வி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு எல்லோரிடமும் பெயர் எழுதி போட்டார். அதில் தமிழ் செல்வி நினைத்த சேது அம்மா பெயர் மீனாட்சி தான் வருகிறது.

சின்ன மருமகள்:

வீட்டில் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டிலும் சேதுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதில் ராஜாங்கம், அழகர் சேது என்று பேரனுக்கு பெயர் வைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். பின் தமிழ் தேர்வு இருப்பதால் தன் அம்மாவுடன் குழந்தையை அழைத்து கொண்டு கல்லூரி சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கல்லூரிக்கு தமிழ்ச்செல்வி தேர்வு எழுத சென்றிருக்கிறார். அங்கு குழந்தையை தமிழ் அம்மா பார்த்துக் கொள்கிறார். குழந்தை அழுவதால் தமிழிடம் பால் கொடுக்க சொல்கிறார்கள். தமிழ் குழந்தையும் கவனித்துக் கொண்டு பரிட்சையும் நல்லபடியாக எழுதி முடிக்கிறார். இதை பார்த்து தமிழில் அம்மா ரொம்பவே பெருமைப்படுகிறார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகளை அன்பாக பார்த்துக் கொள்கிறார். சேது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யாவும் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் குழந்தையை சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மாற்றி கொள்ள வேண்டும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வந்ததால் சேது-தமிழ் இருவரும் வருகிறார்கள். மோகனா, குழந்தைக்கு அழகர் என்று பெயர் வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். பின் குழந்தையை மாற்றிக் கொள்கிறார்கள். அப்பத்தா, குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். அதைக் கேட்டு செய்து எமோஷனலாக அழுகிறார். பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததை நினைத்து சேது ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதேபோல் தமிழும் தன்னுடைய மகனை பார்த்து சந்தோஷப்படுகிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full