பெயர் சூட்டும் விழா: குழந்தைகளுக்கு சேது- தமிழ் என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? சின்ன மருமகள்

குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா

By subhashini · 18/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், எனக்கு என்னுடைய குழந்தையை வேண்டும். நியாயம் கேட்டு தான் இந்த மணியை அடித்து இருக்கிறேன் என்றார். ஊர் தலைவர்கள் ராஜாங்கம் வீட்டிற்கு சென்று தமிழ் செல்வி கொடுத்திருக்கும் புகாரை பற்றி சொன்னார்கள். இதை கேட்டு ராஜாங்கம், சேது பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் பஞ்சாயத்து நடக்கிறது. தமிழ்செல்வி தன் தரப்பில் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். சேது, என் மகனை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன் என்றார். காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்ச்செல்வி, எனக்கு என்னுடைய இரண்டு குழந்தைகளும் வேண்டும். என்னால் ஒத்துக் கொள்ளவே முடியாது என்று சண்டை போட்டார். சேதுவும் தன் தரப்பிற்கு தன்னுடைய மகன் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். பின் பஞ்சாயத்தில் தலைவர்கள், தீர்ப்பை குழந்தைகளிடமே விடுகிறார்கள். சீட்டில் இரண்டு குழந்தைகளும் அம்மாவிடம் வேண்டுமா? இல்லை ஒரு குழந்தை அப்பாவிடம் வேண்டுமா? என்று எழுதி போட்டார்கள். அதில் அம்மாவிடம் ஒரு குழந்தை, அப்பாவிடம் ஒரு குழந்தை என்று தீர்ப்பு வருகிறது. ஆனால், தமிழ் செல்வி அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

சின்ன மருமகள்:

சேது, நான் என்னுடைய அம்மா தான் மகளாக பிறப்பதாக கனவில் சொல்லுவார். என் மகளை பார்க்க வேண்டும். அவருக்கு என்னுடைய பாசம் வேண்டும் என்றார். பஞ்சாயத்தில், வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்குமே உங்கள் இருவரின் பாசம் கிடைக்க வேண்டும் என்றார்கள். சேது ஒத்துக்கொண்டார். ஆனால், தமிழ் செல்விக்கு விருப்பமில்லை. இருந்தாலும் எதுவும் பேசாமல் தன்னுடைய மகளை எடுத்துக்கொண்டு சென்றார். இதற்கெல்லாம் காரணம் அப்பத்தா என்பதால் தமிழ் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகன் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் சேது, குழந்தையை பார்த்துக்க சொல்லி குளிக்க போகிறார். ஆனால், ஐஸ்வர்யா குழந்தையை கண்டு கொள்ளாமல் பாட்டு கேட்டு இருந்தார். இதனால் கொந்தளித்த சேது, ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். அதற்கு பின் தமிழ்ச்செல்வி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு எல்லோரிடமும் பெயர் எழுதி போடுகிறார். அதில் தமிழ் செல்வி நினைத்த சேது அம்மா பெயர் மீனாட்சி தான் வருகிறது.

சீரியல் ட்ராக்:

வீட்டில் எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டிலும் சேதுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். அதில் ராஜாங்கம், அழகர் சேது என்று பேரனுக்கு பெயர் வைக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். பின் தமிழ் தேர்வு இருப்பதால் தன் அம்மாவுடன் குழந்தையை அழைத்து கொண்டு கல்லூரி செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full