மீண்டும் மன்மத லீலையில் இறங்கிய போஸ், தமிழ் சொன்ன வார்த்தையால் வேதனையில் சேது- சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் திருந்தி விட்டான் என்று காவியாவின் அம்மா போன் செய்து ஈஸ்வரிடம் பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, காவியாவின் அம்மா எல்லோருமே காவியாவை மனமிரங்கி போஸ் உடன் சேர்ந்து வாழ சொன்னார்கள். ஆனால், காவியா மறுத்தார். அதற்கு பின் ஐஸ்வர்யா, தமிழ் தன்னிடம் தகராறு செய்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பினார். இன்னொரு பக்கம் சேது, தமிழ் சொன்ன விஷயத்தை சொன்னார். கருப்பன், நீ பொதுவெளியில் மன்னிப்பு கேள். தமிழ் மனம் மாறும் என்றார். உடனே சேது, இதற்கு நானே ஒரு முடிவு எடுக்கிறேன் என்றார்.
தமிழ் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சேது, தமிழின் காலை அமுத்திவிட்டு தன்னுடைய குழந்தையிடம் ரொம்ப எமோஷனலாக பேசி மன்னிப்பு கேட்டார். அதற்குப்பின் சாவித்திரி- தாமரை இருவரும் கோவிலில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, சாவித்திரி செய்த தவறை பற்றி சுட்டிக்காட்டி வம்பு இழுத்தார். உடனே தாமரை, உங்கள் மகன் போஸ் செய்தது மட்டும் நியாயமா? என்றார். பின் இருவரும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சின்ன மருமகள்:
இதனால் கோபப்பட்ட ராஜாங்கம் இருவரையும் திட்டி விட்டார். பின் ராஜாங்கம், தாமரைக்கு சீக்கிரமாக திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏதாவது செய்து கொண்டிருப்பாள். தரகரிடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல் என்றார். இன்னொரு பக்கம் சேது, தமிழ்ச்செல்வி- மலர் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு சென்றார். சேது, கருப்பனிடம் சொல்லி ஊர் முழுக்க சாரி தமிழ்ச்செல்வி என்று போஸ்டரை ஓட்ட சொல்லியிருந்தார். முதலில் தமிழ் செல்வி அதை கவனிக்கவில்லை. பின் சேது ஏதேதோ சொல்லி தமிழ்செல்வியை போஸ்டர் பார்க்க வைத்தார். அதை பார்த்து தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, நீ நாலு சுவத்துக்குள் சொல்லக்கூடாது என்று சொன்னதால் தான் ஊர் முழுக்க எழுதி ஒட்டினேன் என்று சொல்கிறார். உடனே தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு செல்கிறார்.
சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருக்கிறார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று சொல்கிறார்.
கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று பழையபடி சண்டைக்கு நிற்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் சாவித்திரி சவால் விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் சேது, நடந்ததை எல்லாம் கருப்பன் தனத்திடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். தமிழின் மனதை மாற்ற என்னெல்லாம் செய்யலாம் என்று அடுத்த திட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்யாமல் போன் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். அப்போது அங்கு வந்த பெண்ணிடம் போஸ் கடலை போட்டுக்கொண்டு அந்த பொண்ணை கரெக்ட் செய்யப் பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.