குடித்துவிட்டு போஸ் செய்த ரகளை, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரியால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் தமிழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்து விடுகிறது. சேதுவின் மீது பாம்பு ஏறி விடுகிறது. ஆனால், சேது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். பின் சேது கண்விழித்து பாம்பை பார்த்து கத்தினார். தமிழ் சாமர்த்தியமாக பாம்பை பிடித்து வெளியே போட்டு விட்டார். பின் எல்லோரும் தமிழ் செல்வியை பாராட்டுகிறார்கள்.
கெஸ்ட் ஹவுஸில் பாம்பு வந்ததால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறிப் போனார்கள். பின் அந்த பாம்பையும் அப்புறப்படுத்தி வீட்டுக்கு வெளியில் பாம்பு இருகிறதா? என்று சோதிக்க சொன்னார்கள். பின் ராஜாங்கம், இனி சேது- தமிழ் அங்கு இருக்க தேவை இல்லை. இருவரும் அவர்களுடைய ரூமிலேயே இருக்கட்டும் என்றார். தமிழ் முடியாது என்று மறுத்தார். உடனே அப்பத்தா, ராஜாங்கம் இருவரும் சொல்வதால் தமிழ் மீண்டும் வீட்டிற்கு வர தயாராக ஒத்துக் கொண்டார். பின் கெஸ்ட் ஹவுஸில் இருந்து துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தமிழ் வீட்டிற்கு வந்தார்.
சின்ன மருமகள்:
இதனால் சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் தமிழ்செல்வியை வேண்டும் என்று சேது வம்பு இழுத்து கொண்டே இருந்தார். ஆரத்தி எல்லாம் எடுத்து தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதால் ரொம்ப அலைச்சலாக இருக்கிறது படிக்கட்டு ஏற முடியவில்லை என்று தனத்திடம் புலம்பி கொண்டிருந்தார். இதை கேட்டு சேது, தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு மேலே போனார். நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் மீது சேதுவுக்கு காதல் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், அப்பத்தா சேர்ந்து ஜோசியரை வரவைத்து சேது- தமிழ் ஜாதகத்தை பார்க்க செல்கிறார்கள். அப்போது ஜோசியர், இந்த ஜாதகம் கொண்டவர்கள் சேர தான் போகிறார்கள். ஆனால், அதற்குள் சில சிக்கல்கள் இருக்கிறது. நான் சொல்லும் மூன்று பரிகாரங்களை செய்தால் எல்லாம் தீர்ந்து விடும். கோயிலில் வள்ளி திருமணம் நாடகம் நடத்துங்கள், இலவச அன்னதானம் போடுங்கள். ரெண்டு பேரும் சேர்ந்து நன்றாக வாழ்வார்கள் என்று சொல்கிறார். ராஜாங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சேது தங்களுடைய திருமண நாள் பற்றி சொல்கிறார். தமிழ் அதை பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் போஸ் நிறைய குடித்துவிட்டு காவியா ரூமிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். உடனே அங்கு வந்த ஈஸ்வரி, அமைதியாக இரு போஸ் என்று சொல்கிறார். ஒரு கட்டத்தில் போஸ், இவ்வளவு நாள் நீ கண்டிஷன் போட்டாய். இனி நான் போடுகிறேன். நீ புடவை தான் கட்ட வேண்டும். வெளியே போகக்கூடாது. நான் சொல்லும் பேச்சை தான் கேட்க வேண்டும். இது என்னுடைய கேரக்டரே கிடையாது என்று எல்லா உண்மையும் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு காவியாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.