மருந்தை போராடி எடுத்த தமிழ், போஸ் செய்த சதி வேலை, சேது என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்

By subhashini · 6/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்-சேது இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றார்கள். அப்போது தமிழ், செல்லும் வழியில் எலும்புக்கூடு தொங்கிருப்பதை பார்த்து பயந்து ஒரு புதை குழியில் விழுந்து விட்டார். பின் தமிழ் காப்பாற்றுங்கள் என்று கத்திக்கொண்டு இருந்தார். தமிழ் கத்தும் சத்தம் சேதுவிற்கு கேட்டு விட்டது. பின் தமிழ் போன வழியில் சேது சென்றார். அதற்குள் தமிழ் புதைக்குழிக்குள் சென்று விட்டார். தமிழ் புதை குழிக்குள்ளே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து சேது வந்து விட்டார்.

பின் ஒரு குச்சியை வைத்து தமிழை புதைகுழியிலிருந்து வெளியே எடுத்து விட்டார். அதற்குப்பின் சேது, எதற்காக வந்தாய் என்று திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு தமிழ், மாமாவின் உயிரை காப்பாற்ற மருந்து வேண்டும். அதற்காகத்தான் வந்தேன் என்றார். அந்த சமயம் பார்த்து வண்டுகள் வந்தது. ஆனால், இருவரின் மீதும் சேரு இருந்ததால் வண்டுகள் சென்று விட்டது. இதுதான் மருந்து எடுப்பதற்கு சரியான வழி என்று இருவருமே தங்கள் உடலின் மீது சேருகளை பூசிக்கொண்டு போகலாம் என்றார் சேது.

சின்ன மருமகள்:

அதற்கு தமிழ், வேண்டாம் தனித்தனியாக சென்று சீக்கிரம் மருந்து எடுக்கலாம் என்று பிரிந்து சென்றார்கள். ஒரு வழியாக மருந்து இருக்கும் இடத்திற்கு தமிழ்ச்செல்வி வந்து விட்டார். பின் வண்டுகளை வெளியே வர வைப்பதற்காக தன் கையை கிழித்து ஒரு துணியில் ரத்தத்தை சிந்தினார். பின் வண்டுகள் ரத்த வாடைக்கு அந்த துணியின் மீது உட்காருகிறது. உடனடியாக தமிழ்செல்வி நெருப்பை போட்டு அந்த வண்டுகள் எல்லாம் கொல்லுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஒரு வழியாக வண்டுகளை எல்லாம் சாவடித்து மருந்தை தமிழ்ச்செல்வி எடுத்து விடுகிறார். பின் தமிழ், மருந்து எடுத்து வரும்போது வண்டுகள் துரத்துகிறது. இருந்தும் எப்படியோ தப்பித்து விடுகிறார். இன்னொரு பக்கம் சேது, மருந்து எடுக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார். அங்கு அந்த கூட்டின் மீது ஒரு வித பவுடரை தூவ, அதிலிருந்து வண்டுகள் வெளியே வந்து சேதுவை தாக்குகிறது. இருந்தும் சேது போராடுகிறார். இன்னொரு பக்கம் போஸ், எங்கு செல்வது? என்ன செய்வது? என்று புரியாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து தமிழ்செல்வி, மருந்து எடுத்து விட்டேன். வந்து விடுங்கள் என்று சிக்னல் கொடுக்கிறார். ஆனால், அது சேது காதில் விழவில்லை. இதை கவனித்த போஸ், தமிழ்ச்செல்வியின் பின்னால் இருந்து தலையில் அடிக்கிறார். தமிழ்ச்செல்வி பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறார். பின் அந்த மருந்தை போஸ் எடுத்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் ராஜாங்கம் குடும்பத்தினர் எல்லோருமே கவலைக்கிடத்தில் இருக்கிறார்கள். டாக்டர், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதால் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full