தன் மகனை வைத்து புது திட்டம் போடும் ஈஸ்வரி, சேது சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 10/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது கொண்டு வந்த மருந்தை வைத்து எல்லோருக்குமே கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். எல்லோரும் கண்விழித்து விட்டார்கள். ஆனால், தமிழ்ச்செல்விக்கு பூச்சி கடிக்கவில்லை என்று சித்தர் சொன்னார். டாக்டர்களுமே தமிழ்ச்செல்விக்கு தீவிரமாக சிகிச்சை கொடுத்தார்கள். அதற்குப்பின் ஊர் கிராம மக்கள் எல்லோருமே சேதுவையும் போசையும் பாராட்டி பேசி இருந்தார்கள். அதற்கு பின் போஸ், அவருடைய அம்மா, அக்கா இருவருமே பாராட்டி பேசினார்கள்.

அப்போது போஸ், இந்த மருந்தை தமிழ்ச்செல்வி தான் எடுத்து வந்தார். ஆனால், அவளுக்கே தெரியாமல் அவளை அடித்துவிட்டு மருந்தை கொண்டு வந்தேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்.
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கண்விழித்தார். அப்போது சேது, நான் சொன்னாலும் நீ கேட்கவில்லை. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய் என்றார். தமிழ் செல்விக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.

சின்ன மருமகள்:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, போஸ் தான் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றினான். அவனுக்குதான் நாம் எல்லோரும் நன்றி கடன் பட்டிருக்கோம் என்றெல்லாம் சொன்னார். உடனே ராஜாங்கம், போஸை மன்னித்து விட்டு வீட்டிலேயே தங்க சொன்னார். இன்னொரு பக்கம் தமிழுக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதால் அவர் தங்கை ஒத்தடம் கொடுத்தார். அப்போது தமிழின் தலையில் அடிபட்டு இருப்பதை அவருடைய தங்கை பார்த்து விசாரித்தார். தமிழ், நான் மருந்து எடுத்துட்டு வரும்போது யாரோ என்னை தலையில் அடித்தது போல இருக்கிறது. அப்போதுதான் நான் மயங்கி விழுந்தேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, என் குடும்பத்தில் உள்ள பாதிப்பேர் உன் மீது கோபத்தை காண்பித்தாலும் நீ மருந்து எடுக்க வந்தது பெரிய விஷயம். ரொம்ப நன்றி என்று சொல்கிறார். அதற்கு தமிழ்செல்வி, இப்போது நமக்குள் வெறுப்பு கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால், இதற்கு முன்பு நாம் இருவரும் பாசம் வைத்து இருந்தோம். அது என்றும் மாறாது. நான் மருத்துவர். எல்லோருக்குமே உதவி செய்வது தான் என்னுடைய தொழில் என்று சொன்னார். இன்னொரு பக்கம் பரம்பரை பரம்பரையாக அரசியலில் இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர் ராஜாங்கத்திடம் நலம் விசாரிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் அவர், தன்னுடைய மகள் திருமணமாகி கொஞ்ச நாளிலே விவாகரத்து வாங்கி வீட்டில் இருக்கிறார். அந்த மாதிரி இருக்கும் நபர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, தன் மகனை எப்படியாவது கோடிக்கணக்கில் சொத்துள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். பின் இதைப் பற்றி போஸ் இடம் ஈஸ்வரி சொல்கிறார். போசுமே சம்மதிக்கிறார். ஈஸ்வரி, நான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீ பல கோடி சொத்துக்கு அதிபதியாக போகிறாய் என்றெல்லாம் சந்தோஷப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full