அவசர அவசரமாக போஸுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு, சந்தோஷத்தில் தமிழ் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் வீட்டில் தீபாவளி பண்டிகையை ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடினார்கள். ஒவ்வொருவருமே தங்களுடைய நடிப்பு திறமையை காண்பித்தார்கள். அதற்குப்பின் அப்பத்தா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு எல்லாம் கொடுத்தார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பட்டாசு வெடித்தார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி பயங்கரமாக வயிறு எரிகிறார். போஸ், தமிழை பழிவாங்க வேண்டும் என்று பட்டாசு பாக்சில் மத்தாப்பை எரிய வைத்து போட்டு விட்டார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி பட்டாசு எடுக்க வந்தார்.
பட்டாசு வெடித்ததில் தமிழ் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே பதறிக் கொண்டிருந்தார்கள். உடனே சேது மாடியில் இருந்து கீழே குதித்து தமிழை காப்பாற்றி விட்டார். பின் ராஜாங்கம், பட்டாசு வெடித்த வரையும் போதும் என்று திட்டி இருந்தார். இன்னும் தமிழ் அந்த அதிர்ச்சியில் இருந்தார். இதனால் அய்யனார் தமிழுக்கு சுத்தி போட்டார். இன்னொரு பக்கம் அப்பத்தா, தமிழ்ச்செல்வியை காப்பாற்றியதால் சேதுபதியை ரொம்ப பெருமையாகவும் பேசி கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் அமைச்சர் வீட்டில் இருந்து போஸை பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி ஈஸ்வரிடம் சொன்னார்கள். இதனால் ஈஸ்வரி, தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகன் மற்றும் மகளிடம் எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்து விட வேண்டும் என்றெல்லாம் சதி திட்டம் போட்டார். அதற்குப்பின் சேது மேலிருந்து கீழே விழுந்ததால் காலில் அடிபட்டு இருந்தது. இதை அறிந்த தமிழ், சேதுவின் காலில் எண்ணெய் தேய்த்து நீவி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டிற்கு அமைச்சர் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோருமே வந்துவிடுகிறார்கள். மணப்பெண் காவியா நந்தினி ரொம்ப திமிராக நடந்து கொள்கிறார். ஆனால், அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது வந்த போஸ் பெண்ணை பார்த்து சிரித்து வெட்கப்படுகிறார். போஸுக்கு பெண்ணை பிடித்து விடுகிறது. பின் போஸ்-காவியா இருவருக்குமே பிடித்து விடுவதால் இரு வீட்டிலேயுமே திருமணத்தை பேசி முடிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் பார்த்து மலர் ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் கல்லூரியில் தேர்வு முடிவுகள் வந்திருக்கிறது. அதில் தமிழ்செல்வி முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். கல்லூரி ஆசிரியர் மட்டுமில்லாமல் வகுப்பில் உள்ள எல்லோருமே தமிழ் செல்வியை பாராட்டுகிறார்கள். தமிழ்செல்வி சந்தோஷத்தில் இருக்கிறார். அதற்குப்பின் சேது, போஸுக்கு திருமணம் ஆவதை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட தனம், நீங்களும் உங்கள் தம்பியை போல என் அக்காவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது