போஸின் திமிரை அடக்க தமிழ்செல்வி போட்ட சவால், காவியா வைத்த டெஸ்ட் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ், சாவித்திரி, தாமரை இருவருமே ஈஸ்வரிக்கு வரப்போகும் மருமகளை பற்றி தவறாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் கோபப்பட்டு ஈஸ்வரி சண்டைக்கு போனார். பின் அந்த சமயம் ராஜாங்கம் வந்தவுடன் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். பின் கல்லூரியிலிருந்து ராஜாங்கத்திற்கு போன் செய்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கல்லூரி பீஸ் செலுத்துவதாக சொன்னீர்கள். எப்போது கல்லூரிக்கு வருகிறீர்கள்? விழா ஏற்பாடு செய்ய தேதி கொடுங்கள் என்றார். அதற்கு ராஜாங்கம் சம்மதித்தார்.
பின் கல்லூரி ஆசிரியர், உங்கள் மருமகள் தமிழ்ச்செல்வி தான் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று சொன்னவுடன் ராஜாங்கம் எதுவுமே சொல்லலே அமைதியாக இருந்தார். அப்பத்தா மட்டும் ரொம்ப
சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் மலர் பத்தாம் வகுப்பில் அதிகமாக மதிப்பெண் பெற்றிருப்பதை அறிந்த தமிழ், நீங்கள் மேற்கொண்டு படிக்கணும் என்று சொன்னார். அதற்கு மலர், எனக்கு படிக்கணும் என்று ரொம்ப ஆசை இருந்தது, ஆனால், முடியவில்லை.
சின்ன மருமகள் சீரியல்:
எனக்கு வக்கீல் ஆகணும் என்றெல்லாம் சொன்னார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன், தயவுசெய்து நீங்கள் மேற்கொண்டு படியுங்கள் என்று உத்வேகம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி என் மகனை மேனேஜரில் இருந்து முதலாளி ஆக்க முடியாதா? என்றெல்லாம் கேட்டார். இதைக் கேட்டு ராஜாங்கம், திருமணத்திற்கு முன்பு உன் மகனுக்கு ஒரு கோடி ரூபாயில் செக் தருகிறேன். அதை வைத்து சொந்தமாக தொழில் செய்துகொள் என்றார். ஈஸ்வரி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ், தமிழ்செல்வியை சந்தித்து ராஜாங்கம் ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னதை சொல்கிறார். இதை கேட்ட தமிழ்செல்வி, நீ உன்னுடைய ஆணவத்தாலே அழியப் போகிறாய். என்னை அடித்து விட்டு தான் நீ மருந்து கொண்டு வந்த விஷயம் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் வீட்டில் சொல்லவில்லை. உனக்கான அழிவு காலம் நெருங்கி விட்டது என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு போஸ், நான் கல்யாணம் செய்து கோடீஸ்வரனாக தான் வாழ போகிறேன் என்கிறார். அதற்கு தமிழ், உனக்கு அந்த கல்யாணமும் நடக்காது, ஒரு கோடி ரூபாய் பணமும் கிடைக்காது என்றெல்லாம் சவால் விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் போஸ், ராஜாங்கம் கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பற்றி காவியா விடம் சொல்கிறார். ஆனால், காவியா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிண்டல் செய்கிறார். அதற்குப்பின் காவியா அனுப்பிய நர்ஸ் சில டெஸ்ட்களை எடுக்கிறார்கள். எச்ஐவி, எயிட்ஸ் இருக்கிறதா? என்றெல்லாம் சோதனை செய்ய சொல்லி இருக்கிறார் காவியா என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் இடி மின்னல் இருப்பதால் தமிழ்செல்வி, சேதுவை உள்ளே தூங்க சொல்கிறார். பின் தமிழ்-சேது இருவரும் நெருக்கமாக இருப்பது போல கனவு காண்கிறார்கள். பின் டெஸ்ட் முடிந்ததுமே காவியா போன் செய்து, உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் அதிகமாக குடிப்பது போல தெரிகிறது என்று கேட்டவுடன் போஸ் தடுமாறி நிற்கிறார்.