தனம் பேசிய மொழியால் குழம்பி போய் இருக்கும் சேது, காவியாவிடம் கெஞ்சி கதறும் ஈஸ்வரி - சின்ன மருமகள்

By subhashini · 11/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தான் கண்ட கனவை தனத்திடம் சொல்லி சந்தோஷப்பட்டார். தனம், சீக்கிரத்திலேயே நீங்களும் அக்காவும் சேர்வது வாழ்வீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைப்பதை பற்றி பேசி இருந்தார். உடனே சேதுவை அழைத்த ராஜாங்கம், எனக்கு தமிழ்செல்வியை விவாகரத்து செய்யணுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. யோசித்து முடிவெடு என்றார். சேது, தமிழ்ச்செல்வியை ரொம்பவே காயப்படுத்தி விட்டேன்.

சேது உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரியின் அண்ணன் மகள், சேது உடற்பயிற்சி செய்திருக்கும் அழகை ரசித்து போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டார். இதை பார்த்து தனத்திற்கு பயங்கர கோபம் வந்தது. பின் ஈஸ்வரியின் அண்ணன் மகளை திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் கல்லூரியில் இருந்து தமிழ் செல்வி-சேது இருவருக்கும் விருது கொடுப்பது தொடர்பாக ராஜாங்கத்திடம் கேட்டார்கள். அதற்கு ராஜாங்கமும் ஏற்பாடு செய்ய சொன்னார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வேலை செய்யும் ஹோட்டலுக்கு போன் செய்து தமிழ் செல்வி வேலையை விட்டு நிறுத்த சொல்லி ராஜாங்கம் சொன்னார்.

சின்ன மருமகள்:

இதை அறிந்த தமிழ், எதற்காக என்னை வேலை விட்டு நீக்க சொன்னீர்கள்? என்றார். அதற்கு ராஜாங்கம், நீ குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு இப்படி கஷ்டமான வேலை செய்ய தேவை இல்லை. எனக்கு கணக்கு வழக்கு பார்க்க ஆள் தேவை. உனக்கு 20,000 சம்பளம் தருகிறேன். அந்த வேலையை நீ செய் என்றார். அப்பத்தாவும் தமிழ்செல்வியை கட்டாயப்படுத்துகிறார். பின் ஒரு வழியாக தமிழ்செல்வி, ராஜாங்கம் சொன்ன வேலையை ஏற்றுக் கொண்டார். சேது ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியிடம் தமிழ்செல்வியை பற்றி அவர் அண்ணன் மகள் விசாரித்தார். அவருமே நடந்த எல்லா விஷயத்தை பற்றி சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தனம் புரியாத மொழியில் திட்டியதால் புலம்பிக்கொண்டே ஈஸ்வரி இடம் என்ன அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்கிறார் ஐஸ்வர்யா. ஈஸ்வரிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் ஐஸ்வர்யா, வீட்டிலுள்ள எல்லோரிடமே தனம் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் கேட்டுக் கொண்டிருக்கிறார். யாருமே பதில் சொல்லவில்லை. அதற்குப்பின் சேது, இதைப் பற்றி தனத்திடம் கேட்கிறார். தனம், உங்களுக்கு இந்த மொழி தெரியாதா? நாங்கள் ரகசியமாக பேசும் மொழி என்று சொல்கிறார். பின் அந்த மொழி தெரியாததால் தனம், சேதுவை வெறுப்பேற்றுவதற்காக தமிழிடம் பேசுகிறார். தமிழுமே பதிலுக்கு அந்த மொழியிலேயே பதில் கொடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இவர்கள் இருவரும் புரியாத மொழியில் பேசுவதால் சேது குழம்பிப் போய் இருக்கிறார். இன்னொரு பக்கம் காவியா, போஸை கிச்சனில் தூங்க சொல்கிறார். உடனே ஈஸ்வரி, உன்னை கெஞ்சி கேட்கிறேன். எதுவாக இருந்தாலும் ரூமுக்குள் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதற்கு காவியா, இதுதான் அவனுக்கு கொடுக்கும் தண்டனை. யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full