ஐஸ்வர்யாவிற்கு பாடம் புகட்டிய தனம், சேதுவை பழிவாங்க ஈஸ்வரி செய்யும் சதி வேலை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், தாமரைக்கு சீக்கிரமாக திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏதாவது செய்து கொண்டிருப்பாள். தரகரிடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல் என்றார். இன்னொரு பக்கம் சேது, தமிழ்ச்செல்வி- மலர் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு சென்றார். சேது, கருப்பனிடம் சொல்லி ஊர் முழுக்க சாரி தமிழ்ச்செல்வி என்று போஸ்டரை ஓட்ட சொல்லியிருந்தார். முதலில் தமிழ் செல்வி அதை கவனிக்கவில்லை. பின் சேது ஏதேதோ சொல்லி தமிழ்செல்வியை போஸ்டர் பார்க்க வைத்தார். அதை பார்த்து தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சேது, நீ நாலு சுவத்துக்குள் சொல்லக்கூடாது என்று சொன்னதால் தான் ஊர் முழுக்க எழுதி ஒட்டினேன் என்றார். உடனே தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு சென்றார். சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று பழையபடி சண்டைக்கு நின்றார்.
சின்ன மருமகள்:
இதனால் சாவித்திரி சவால் விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சேது, நடந்ததை எல்லாம் கருப்பன் தனத்திடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். தமிழின் மனதை மாற்ற என்னெல்லாம் செய்யலாம் என்று அடுத்த திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்யாமல் போன் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணிடம் போஸ் கடலை போட்டுக்கொண்டு அந்த பொண்ணை கரெக்ட் செய்யப் பார்த்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஐஸ்வரியா, சேதுவிடம் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் தனம் ஓரமாக நின்று பார்க்கிறார். அப்போது ஐஸ்வர்யா, சேதுவை உப்பு முட்டை தூக்க சொல்கிறார். சேது, அதெல்லாம் முடியாது. நாம் ஒன்னும் சின்ன பிள்ளைகள் இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இதை கவனித்த தனம், எதற்காக மாமாவிடம் இப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்கிறார். ஐஸ்வர்யா, கிண்டலாக பேசி திட்டுகிறார். இதனால் கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே ஐஸ்வர்யா ஓங்கி அறியும்போது தனம் கையை முறுக்கி அனுப்பி விடுகிறார். வலி தாங்க முடியாமல் ஐஸ்வர்யா கத்துகிறார். பின் இதைப் பற்றி எல்லாம் ஐஸ்வர்யா, ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி, நீ சேது- தமிழை பிரித்துவிடு. சேதுவை கல்யாணம் செய்து கொள் என்று தேவையில்லாத ஐடியா கொடுக்கிறார். அதற்குப்பின் போகி பண்டிகை என்பதால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எரிக்கிறார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகைக்கு மொத்த வீடுமே அலங்காரம் செய்து கோலாகலமாக இருக்கிறது. வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.