கோர்ட்டில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தையால் கோபப்பட்ட சேது, நீதிபதியின் அதிரடி உத்தரவு - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி தன்னுடைய வகுப்பிற்கு தாமதமாக போனார். இதனால் அங்கு இருந்த ஆசிரியர், தமிழ்ச்செல்வியை திட்டி கிளாசை விட்டு அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தை கைது செய்ய வேண்டும் என்று பணம் கொடுத்தவர்கள் எல்லாம் போராட்டம் செய்தார்கள். இதனால் வீட்டிற்கு வந்த ராஜாங்கம் கட்சியை சேர்ந்தவர்கள், உங்கள் மீது எந்த தவறில்லை என்றாலும் கட்சிக்காக நீங்கள் விசாரணை கமிஷனுக்கு வந்து தான் ஆகணும் என்று சொன்னார்கள். இதனால் ராஜாங்கம் சரி என்றார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் அம்மா, தன் கணவர் ஜெயிலுக்கு போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, தமிழ்ச்செல்வி நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார்.
இன்னொரு பக்கம் சேது வீட்டிற்கு சென்ற வக்கீல், நாளை விவாகரத்து கேஸ் வர இருக்கிறது. தமிழ்ச்செல்வியை என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்யப் போகிறீர்கள் என்று கோர்ட்டில் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு சேதுவின் அத்தை, அவள் நடத்த கெட்டவள் என்று தமிழ்செல்வியைப் பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட சேது, தேவையில்லாத விஷயத்தை பேச வேண்டாம். அவள் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லியதால் தான் நான் அவரை விவாகரத்து செய்ய போகிறேன். மற்றபடி அவள் மீது எந்த வீண்பழியும் போட விருப்பமில்லை. தயவு செய்து தேவையில்லாத விஷயத்தைப் பற்றி பேசவில்லை என்றார் .
சின்னமருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் சேது தனியாக ரூமில் இருப்பதை பார்த்து அவருடைய சித்தி,அத்தை எல்லோரும் சேர்ந்து தமிழ்ச்செல்வியை பற்றி தப்பு தப்பாக பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்டு சேது, நீங்கள் தமிழ் செல்வி பற்றியை பேசுவதற்கு தகுதி இல்லை. என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும். தேவை இல்லாதது பற்றி பேசாதீர்கள் என்று திட்டி அவர்களை வெளியே அனுப்பி விட்டார். காலையில் சேது கோர்ட்டுக்கு கிளம்ப தயாராகி இருந்தார். அப்போது சேதுவின் அப்பா ராஜாங்கம், நீ குடும்பத்திற்காக எல்லாம் விவாகரத்துக்கு செய்ய வேண்டாம்.
நேற்று எபிசோட்:
உன்னுடைய மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்றார். உடனே சேது, நான் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்றார். அதற்குப்பின் அப்பத்தா, விவாகரத்து செய்ய வேண்டாம் என்று சேதுவிடம் அழுது புலம்பி இருந்தார். ஆனால், சேது அப்பத்தாவை திட்டி விட்டு சென்று விட்டார். பின் கோர்ட்டுக்கு சேது, தமிழ்ச்செல்வி வந்துவிட்டார்கள். நீதிபதி வழக்கை விசாரித்தார். அப்போது சேது, எனக்கு விவாகரத்து வேண்டும் என்றார். ஆனால், தமிழ் செல்வி விவாகரத்து வேண்டாம் என்றார். இதனால் நீதிபதி, விவாகரத்து வாங்குவதற்கு என்ன காரணம் என்று சேதுவிடம் கேட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேது, என்னிடம் அவள் பொய் சொல்லிவிட்டாள். அதனால் தான் விவாகரத்து கேட்கிறேன் என்றவுடன் நீதிபதி, பொய் சொன்னதற்கெல்லாம் விவாகரத்தா? என்கிறார். அப்பொழுது தமிழ்ச்செல்வி, நான் பொய் சொன்னது உண்மைதான். அதானல் அவர் ரொம்பவே காயம் அடைந்திருக்கிறார். ஆனால், நான் விவாகரத்து கொடுக்க விருப்பமில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கணவன் இல்லை என்றாலும் என்னுடைய குழந்தை பிறக்கும்போது அப்பா வேண்டும். அதனால் நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்வதால் சேது பயங்கரமாக கோபப்படுகிறார். உடனே நீதிபதி, ரெண்டு பேரும் சேர்ந்து ஆறு மாசம் வாழுங்கள். இந்த தீர்ப்பை நான் காலத்திடமே விடுகிறேன் என்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் சேதுவின் அத்தை கோபப்படுகிறார். அதற்குப்பின் சேதுவின் சித்தி, தமிழ்ச்செல்வி சொல்லாததை எல்லாம் சொல்கிறார். அதனால் சேது அத்தை, தமிழ்ச்செல்வியிடம் செக் கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ பணத்தை எடுத்துக் கொண்டு விவாகரத்து கொடுத்துவிடு என்கிறார். உடனே தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து நீங்கள் தொகையை எழுதிக் கொண்டு நான் கொடுத்த சில்லரையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இதனால் சேது, தமிழ்ச்செல்வி மீது கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது