லட்சுமியால் தமிழின் வாழ்வில் ஏற்படும் மாற்றம், சேது அறிவித்த சின்னம் - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் தயாராகி சேதுவை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் உள்ள யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம் மீண்டும் கட்சியில் சேருகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது. பின் ராஜாங்கம், சேதுவை சுயேட்சையாக தேர்தலில் நிற்க வைத்து போட்டியிடுவதாக சொன்னார். சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம், நான் உனக்காக துணையாக நிற்பேன். இனி எந்த கட்சியும் நமக்கு தேவையில்லை. நீ வெற்றி பெறுவாய் என்று சொல்லி வேட்பு மனு தாக்குதலில் கையெழுத்து போட சொன்னார். சேதுவுமே தன் அப்பாவிற்காக கையெழுத்து போட்டார்.
வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கம், சேது எங்கே சென்றிருப்பார்கள் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த ராஜாங்கம், சுயேட்சையாக சேது தேர்தலில் நிற்க போகிறான். நான் துணையாக இருக்க போகிறேன் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள சந்தோஷ் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் ஈஸ்வரிக்கு மட்டும் பயங்கர கடுப்பாகிறது.
அதற்குப்பின் ஆட்டோவிற்காக தமிழ் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சேது, நிலைமையை பார்த்தாயா? நீ என் வாழ்க்கையை விட்டு போனதுதான் ரொம்ப நல்லது என்று ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
சின்ன மருமகள்
தமிழ் அதை எதையும் காதில் வாங்காதது போல் ஹெட்செட்டை கழட்டி காட்டினார். சேதுவிற்கு கோபம் தான் வந்தது. பின் தமிழ்செல்வி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது சேது தேர்தலில் நிற்கும் விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடம் சொன்னார். அப்போது ராஜாங்கத்திற்கு எதிர்க்கட்சியாளர்கள் தமிழின் வீட்டிற்கு வந்து சேதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தொடர்பாக பேசி இருந்தார்கள். தமிழ்செல்வி, அதெல்லாம் முடியாது. இங்க இருந்து கிளம்பி போங்க என்று திட்டி அனுப்பி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, தமிழுக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார். தமிழுமே அப்பத்தாவுடன் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார். பின் அப்பத்தா, உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக என்னை அழை என்று சொல்கிறார். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே கட்சிக்கு என்ன சின்னம் வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். சேது, ஆப்பிள் சின்னம் வைக்கலாம் என்று சொல்கிறார். இதை ஈஸ்வரியும் அவருடைய மகளும் சிரித்துக்கொண்டு நக்கலாக பேசி கொள்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பெண்களின் நல வாழ்வுக்காக போராடும் லட்சுமி என்பவரை தமிழ் சந்தித்து பேசுகிறார். அப்போது லட்சுமி, இந்த வருடம் தேர்தலில் பெண்களுக்காக நீங்கள் நிற்க வேண்டும் என்கிறார். தமிழ், எனக்கு அந்த எண்ணம் இல்லை. நான் படிப்பில் தான் கவனம் செலுத்த போகிறேன் என்று சொல்கிறார். இருந்தாலும் லக்ஷ்மி விடாமல் தேர்தலில் நிற்பதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழும் நான் யோசித்து முடிவு சொல்கிறேன் என்று கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரிக்கு போன் செய்த எதிர்கட்சியாளர், தமிழ் காசு வாங்கி சேதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்று சொல்கிறார். இதை அறிந்தவுடன் ஈஸ்வரி சந்தோசப்படுகிறார்.