தமிழ்செல்வி கர்ப்பத்திற்கு யார் காரணம்? மூப்புதாய் சொன்ன அருள்வாக்கு - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் வெளிநாட்டில் இருந்து சிலர் பொங்கல் கொண்டாடுவதற்கு ராஜாங்கம் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்களை ராஜாங்கம் குடும்பத்தினர் அன்பாக வரவேற்று கவனித்தார்கள். பின் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ராஜாங்கம், கார்- தங்க காசுகளை பரிசாக கொடுத்தார். பின் இதை தமிழ்ச்செல்வி- சேது பெயரில் கொடுக்க சொன்னார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்தார்கள்.
நடன கலைஞர்களை வீட்டிற்கு வரவைத்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டம் என்று ராஜாங்கம் வீடு களைகட்டி இருக்கிறது.
அப்போது கருப்பன், தமிழ் மனதில் காதல் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு நீ அவர்களுடன் சேர்ந்து நடனமாடு. தமிழ் கோபப்பட்டால் அவர் உன்னை காதலிக்கிறார் என்று அர்த்தம் என்று சொன்னார். பின் சேதுவின் அண்ணன் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததால் சேது பயங்கரமாக அந்த நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இதை பார்த்து தமிழ் கோபப்பட்டு உள்ளே சென்று விட்டார். இதை பார்த்து சேதுவிற்கு சந்தோஷமாக இருந்தது.
சின்ன மருமகள்:
பின் சேது, உன் மனதில் காதல் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது என்றெல்லாம் போதையில் உளறினார். இதை அறிந்த தமிழ்செல்வி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் குடித்துவிட்டு ஆடுவது எனக்கு என்ன புதிதா? நீங்கள் என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று சென்று விட்டார். அதற்குப்பின் மலைவாழ் கிராமத்தில் இருந்து சில பேர் ராஜாங்கம் வீட்டிற்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அப்போது ஈஸ்வரி, அந்த சாமியாடி பெண்ணை பார்த்து உங்களிடம் கேள்வி கேட்கணும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, தமிழ் கர்ப்பத்திற்கு காரணம் யார்? கர்ப்பமாக இல்லாமல் எப்படி விளக்கு எரிந்தது? சாமின்னு நீங்கள் சொல்வது உண்மையா? உங்கள் நம்பிக்கை எல்லாம் உண்மையா? எனக்கு இது தெரிந்தாக வேண்டும் என்று பேசுகிறார். இதைக் கேட்டு தமிழ் அவமானப்பட்டு இருக்கிறார். கோபத்தில் சேது, ஈஸ்வரியிடம் சண்டைக்கு போகிறார். உடனே ஈஸ்வரி, பொதுவெளியில் நீ சொன்ன வார்த்தை தான் சொன்னேன். எனக்கு விடை தெரியணும் என்று சொல்கிறார்
சீரியல் ட்ராக்:
. உடனே மூப்புத்தாய் சாமி வந்து, என்னுடைய இடத்தில் தான் அவள் கர்ப்பமானார். தமிழ் வயிற்றில் வளரும் குழந்தை இந்த வீட்டு வாரிசு தான். இதை நான் நிரூபிக்கிறேன் என்று வீட்டு வெளியில் இருக்கும் மண்ணை வைத்து ஈஸ்வரியே விளக்கேற்ற சொல்கிறார். விளக்கு எரிகிறது. சாமியாரையில் இருக்கும் மணி சத்தத்தை எழுப்ப வைக்கிறார். இதையெல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் தமிழின் மீது எந்த தவறும் இல்லை என்பது நிரூபணம் ஆகி விடுகிறது.