போஸை காப்பாற்ற ஈஸ்வரி-சித்ரா போடும் சதி திட்டம், சேதுவின் நிலைமை என்ன? சின்ன மருமகள்

By subhashini · 21/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா ரூமிற்குள் வந்துவிட்டார். போசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பயத்தில் உளறினார். கோபத்தில் காவியா, போஸை அடித்துவிட்டு இவ்வளவு கேளாமகேவலமானவனா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையெல்லாம் பார்த்து தாமரை-சாவித்ரி இருவருக்குமே சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய குழந்தைக்காக தான் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து வருத்தப்பட்டார்.

பார்லர் போய்விட்டு ஈஸ்வரி, சித்ரா எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது சாவித்திரி, உன் மகன் செய்த வேலையைப் பற்றி போய் கேள். இந்த கல்யாணம் நடக்குமானே தெரியவில்லை என்று நக்கலாக பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, போஸ் இடம் விசாரித்தார். அப்போது போஸ் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி, போஸை அடிக்கிறார். பின் ஈஸ்வரி, காவியாவிற்கு ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். அதற்கு காவியா, இவ்வளவு கேவலமான மகனை பெற்றுவிட்டு நீங்கள் பேசுகிறீர்களா? உங்களை என்ன செய்கிறேன் பார் என்று திட்டிவிட்டு ஃபோனை வைத்து விட்டார்.

சின்ன மருமகள் சீரியல்:

இதனால் ஈஸ்வரி, கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயத்திலேயே இடிந்து போய் உட்கார்ந்து இருந்தார். இன்னொரு பக்கம் சேது, போஸின் முகத்திரையை கிழிக்க என்ன செய்வது என்று புரியாமல்
புலம்பி கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, எனக்கு எந்த கஷ்டம் என்றாலும் அந்த தெய்வத்திடம் தான் வேண்டுவேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த சாமியிடம் முறையிடுங்கள். அதற்கான வழியை கடவுளே காண்பிப்பார் என்றார். பின் சேது, தன்னுடைய சாமியிடம் போஸின் முகத்திரையை கிழிப்பதற்கு வேண்டிக்கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, சாமியிடம் தன்னுடைய குறைகளையெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார். இதை ஈஸ்வரியின் அண்ணன் மகள் கேட்டு விடுகிறார். அதற்குப்பின் ஈஸ்வரியை சந்தித்த அவருடைய அண்ணன் மகள், போஸ் மருந்தை எடுக்கவில்லையாம். ராஜாங்கம் தரும் ஒரு கோடி ரூபாய் பணத்தை தரவிடாமல் பண்ணுவேன் என்று சேது சொன்ன விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு ஈஸ்வரிக்கு தலையில் இடி விழுகிறது. ஏற்கனவே காவியா, என்ன பிரச்சனை செய்வார்? என்ற வயதில் இருக்கிறார். இப்போது அந்த பணமும் கிடைக்குமா? என்ற குழப்பத்திலேயே பதறிக் கொண்டிருக்கிறார். அதற்கு சித்ரா, அமைதியாக இருங்கள்.

சீரியல் ட்ராக்:

நான் ஒரு வழி செய்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி பாட்டை ஆப் செய்து விடுகிறார். உடனே குழந்தை வயிற்றில் உதைக்கிறது. பாட்டை மீண்டும் தனம் போடுகிறார். குழந்தை அமைதியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் சித்ரா, சேது உண்மை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக ஜூஸில் மயக்கம் மருந்து கலந்து அதை ஈஸ்வரியின் அண்ணன் மகன் கையிலேயே கொடுத்து அனுப்புகிறார். சேது, அந்த ஜூசை குடித்துவிட்டு தலைசுற்றி ரூமில் விழுந்து விடுகிறார். அப்போது கருப்பசாமி வீட்டிற்குள் வருகிறது. கருப்புசாமி சேதுவின் முகத்தின் முன்பு கத்துகிறது. அதைக் கேட்டு சேதுவும் எழுந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full