தமிழ்செல்வியை பழிவாங்க ஈஸ்வரி செய்த சதி, கொந்தளிக்கும் சேதுபதி - சின்ன மருமகள்

By subhashini · 5/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தேர்தல் பற்றி ராஜாங்கம் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ்செல்வியை பற்றி ரொம்பவே குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் ராஜாங்கம், நானே பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்றார். இன்னொரு பக்கம் தமிழ் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தமிழை சந்தித்து ஈஸ்வரி- ஐஸ்வர்யா இருவரும் பேசி இருந்தார்கள். ஐஸ்வர்யா ரொம்பவே தரகுறைவாக தமிழை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

ஈஸ்வரியும் மோசமாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, தமிழை அடிக்கப் போனார். இதையெல்லாம் பார்த்த தமிழின் தோழி வீடியோ எடுத்து விட்டார். பின் இதைப்பற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து தமிழ் செல்விக்காக ஓட்டு கேட்டார்கள். இந்த வீடியோவை பார்த்த ராஜாங்கம், எதற்காக இப்படி செய்தீர்கள் என்று ஐஸ்வர்யாவை கேட்டார். அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கப்பட்டார். இருந்தாலும் ராஜாங்கம் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று திட்டி விட்டு சென்றார். சேது,தமிழுக்கு போன் செய்து கடுமையாக பேசி இருந்தார். மறுநாள் தேர்தல் நடக்கிறது. எல்லோருமே ஓட்டு போட்டார்கள்.

சின்ன மருமகள்:

தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் சேது வெற்றி பெற்று விட்டார். இருந்தாலும் இறுதி கட்டம் வரை சேதுவை பதட்டத்துடன் வைத்து இருந்ததால் தமிழ்ச்செல்வியை எல்லோருமே பாராட்டினார்கள். தமிழ்செல்வியின் முயற்சியும் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பின் தமிழ் செல்வி, தான் துவங்கிய புதிய சாப்பாட்டு தள்ளுவண்டி கடையை லட்சுமி கையால் திறந்து வைக்க சொல்கிறாள். இன்னொரு பக்கம் சேது வெற்றி பெற்றதால் வீட்டில் உள்ள எல்லோருமே கொண்டாடினார்கள். ராஜாங்கம் ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஈஸ்வரி, சாவித்திரி எல்லோருமே தமிழ்செல்வியின் பெயரைச் சொல்லி சேதுவை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தேர்தலில் நடந்ததை சொல்லி கட்டுப்பெறுகிறார்கள். ஒரு கட்டத்தில் சேது எல்லோரையும் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய கேரியரின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் ராஜாங்கத்தை நடுநடுங்க வைத்த தமிழ்ச்செல்வி என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்ட சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

ராஜாங்கம்-சேது இருவரும் தங்களை வெற்றி பெற வைத்த மக்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள். அப்போது தமிழ்ச்செல்வியின் போஸ்டரை பார்த்து சேது, ராஜாங்கம் கோவப்படுகிறார்கள். சேதுவின் அண்ணன் அந்த போஸ்டரை கிழித்து போடுகிறார். வீட்டிற்கு வந்தவுடன் சேது, தமிழ்ச்செல்வியின் மீது கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி இதுதான் சந்தர்ப்பம் என்று தமிழ்ச்செல்வியை பற்றி ரொம்ப மோசமாக பேசி சேதுவின் மனதில் நஞ்சை வளர்க்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full