போஸின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் ஈஸ்வரி, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள்

By subhashini · 25/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, போஸின் முகத்திரையை கிழிக்க என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, எனக்கு எந்த கஷ்டம் என்றாலும் அந்த தெய்வத்திடம் தான் வேண்டுவேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த சாமியிடம் முறையிடுங்கள். அதற்கான வழியை கடவுளே காண்பிப்பார் என்றார். பின் சேது, தன்னுடைய சாமியிடம் போஸின் முகத்திரையை கிழிப்பதற்கு வேண்டிக்கொண்டிருந்தார்.சேது, சாமியிடம் தன்னுடைய குறைகளையெல்லாம் புலம்பி கொண்டிருந்தார்.

இதை ஈஸ்வரியின் அண்ணன் மகள் கேட்டு விட்டார். அதற்குப்பின் ஈஸ்வரியை சந்தித்த அவருடைய அண்ணன் மகள், போஸ் மருந்தை எடுக்கவில்லையாம். ராஜாங்கம் தரும் ஒரு கோடி ரூபாய் பணத்தை தரவிடாமல் பண்ணுவேன் என்று சேது சொன்ன விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டு ஈஸ்வரிக்கு தலையில் இடி விழுகிறது. ஏற்கனவே காவியா, என்ன பிரச்சனை செய்வார்? என்ற பயத்தில் இருந்தார். இப்போது அந்த பணமும் கிடைக்குமா? என்ற குழப்பத்திலேயே பதறிக் கொண்டிருந்தார். அதற்கு சித்ரா, அமைதியாக இருங்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

நான் ஒரு வழி செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி பாட்டை ஆப் செய்து விடுகிறார். உடனே குழந்தை வயிற்றில் உதைக்கிறது. பாட்டை மீண்டும் தனம் போடுகிறார். குழந்தை அமைதியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் சித்ரா, சேது உண்மை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக ஜூஸில் மயக்கம் மருந்து கலந்து அதை ஈஸ்வரியின் அண்ணன் மகன் கையிலேயே கொடுத்து அனுப்பினார். சேது, அந்த ஜூசை குடித்துவிட்டு தலைசுற்றி ரூமில் விழுந்து விட்டார். அப்போது கருப்பசாமி வீட்டிற்குள் வருகிறது. கருப்புசாமி சேதுவின் முகத்தின் முன்பு கத்துகிறது. அதைக் கேட்டு சேதுவும் எழுந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலர் மேற்கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக டுடோரியல் கல்லூரியில் பீஸ் கட்டி அட்மிஷன் போட்டு இருக்கிறார். ராஜாங்கம், இதைப்பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார். இதை கேட்டு மலர், தமிழ் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். எமோஷனலாக மலர், ராஜாங்கம் காலில் விழுந்து நன்றி சொல்கிறார். இன்னொரு பக்கம் காவியா திருமணத்தை நிறுத்தி விடுவாளோ? என்ற பயத்திலேயே ஈஸ்வரி புலம்பி கொண்டிருக்கிறார். கோபம் தாங்க முடியாமல் ஈஸ்வரி, போஸை அடி வெளுத்து வாங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் காவியா, தன்னை ஏமாற்றியதால் போஸின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதோடு கல்யாணத்தை இப்போது நிறுத்த வேண்டாம் மனமேடையில் நிறுத்தி மொத்த சபையின் முன்பு போஸை அவமானப்படுத்த வேண்டும் என்றெல்லாம் யோசிக்கிறார். இன்னொரு பக்கம் மலர், படிக்கப் போவதால் மருதாணி அரைத்து எல்லோரும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தமிழ், தன் கணவருடன் சேர்ந்து மருதாணி வைத்ததெல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full