சாவித்ரியை பழிவாங்க ஈஸ்வரி செய்யும் சதி செயல், சிக்குவாரா தாமரை? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் வக்கீல், நீங்கள் வாபஸ் வாங்குவதுபோல உங்கள் மனைவியும் கோர்ட்டில் வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லணும். அப்படி என்றால் தான் இந்த கேஸ் தள்ளுபடி ஆகும் என்றார். இதனால் சேது கொஞ்சம் தயங்கி நிற்கிறார். அதற்குப்பின் சேது, கேஸை வாபஸ் வாங்கின விஷயத்தை அறிந்த தமிழ்செல்வியின் அம்மா, தமிழுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். பின் சேதுவையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள சொன்னார். ஆனால், தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இன்னொரு பக்கம் காவியா, போஸ் இப்படி திருந்தாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்று திட்டி விட்டார். அதற்குப்பின் போஸுக்கு சரியான தண்டனை கொடுக்கணும் என்று காவியா, போஸ், ஈஸ்வரி, சித்ரா மூவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு போனார். அங்கு போஸின் தலையில் தண்ணியை ஊற்றி பச்சை கலர் துணியை போட சொன்னார். போஸும் காவியா சொல்வது போல செய்தார் .பின் அங்கிருந்த சாமியார் கையில் வேல் இருக்கிறது. அதைப் பார்த்த போஸ், என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
இன்றைய எபிசோட்டில் காவியா, போஸின் வாயில் வேலைக்கு த்தி பரிகாரம் செய்ய சொல்கிறார். வேறு வழியில்லாமல் காவியா சொன்னதை போஸ் செய்கிறார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பாகிறது. இருந்தாலும் சொத்து கையை விட்டு போக கூடாது என்று பொறுத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த வக்கீல், சேது விவாகரத்தை வாபஸ் வாங்க நினைக்கும் விஷயத்தை சொல்கிறார். அந்த சமயம் வந்த சேது, நான் வாபஸ் வாங்க முடிவெடுத்து விட்டேன். நீயும் கோர்ட்டில் வாபஸ் வாங்குவதற்கு சம்மதம் சொல் என்றார். ஆனால், தமிழ்செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மலர், தனம் இருவரும் கேசை வாபஸ் வாங்க சொல்லி கேட்கிறார்கள். ஆனால், தமிழ் எதுவுமே பேசாமல் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கோவிலில் பிச்சைக்காரன் ஒருவன், கோயிலுக்கு வருபவர்களிடம் ஏலனாகவும் நக்கலாகவும் பேசுகிறார். அதோடு முழுநேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரைக்கு இவரை கல்யாணம் பண்ணி வைத்து சாவித்திரியின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று திட்டம் போடுகிறார். அதற்குப்பின் அந்த பிச்சைக்காரனை அழைத்து ஈஸ்வரி, உனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு அந்த பிச்சைக்காரன் ஷாக்காகிறார்.
https://www.youtube.com/watch?v=wgCzl_HSbks
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சாவித்ரியை பழிவாங்க ஒரு பிச்சைக்காரனை தாமரைக்கு கல்யாணம் செய்து வைக்க ஈஸ்வரி திட்டம் போடுகிறார். பின் அந்த பிச்சைக்காரனை பணக்காரன் போல ரெடியாகி கோயிலுக்கு வரவைக்கிறார் ஈஸ்வரி. அதே கோவிலில் சாவித்திரி, தாமரை இருவரும் இருக்கிறார்கள். அப்போது அந்த பணக்காரன் கெட்டப்பில் இருக்கும் பிச்சைக்காரனை பார்த்து தாமரை மயங்கி விடுகிறார்.