ராஜாங்கத்திடம் ஈஸ்வரி கேட்ட விஷயம், சேது சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, போஸ் தான் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றினான். அவனுக்குதான் நாம் எல்லோரும் நன்றி கடன் பட்டிருக்கோம் என்றெல்லாம் சொன்னார். உடனே ராஜாங்கம், போஸை மன்னித்து விட்டு வீட்டிலேயே தங்க சொன்னார். இன்னொரு பக்கம் தமிழுக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதால் அவர் தங்கை ஒத்தடம் கொடுத்தார். அப்போது தமிழின் தலையில் அடிபட்டு இருப்பதை அவருடைய தங்கை பார்த்து விசாரித்தார். தமிழ், நான் மருந்து எடுத்துட்டு வரும்போது யாரோ என்னை தலையில் அடித்தது போல இருக்கிறது. அப்போதுதான் நான் மயங்கி விழுந்தேன் என்றார்.
சேது, என் குடும்பத்தில் உள்ள பாதிப்பேர் உன் மீது கோபத்தை காண்பித்தாலும் நீ மருந்து எடுக்க வந்தது பெரிய விஷயம். ரொம்ப நன்றி என்றார். அதற்கு தமிழ்செல்வி, இப்போது நமக்குள் வெறுப்பு கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால், இதற்கு முன்பு நாம் இருவரும் பாசம் வைத்து இருந்தோம். அது என்றும் மாறாது. நான் மருத்துவர். எல்லோருக்குமே உதவி செய்வது தான் என்னுடைய தொழில் என்று சொன்னார். இன்னொரு பக்கம் பரம்பரை பரம்பரையாக அரசியலில் இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர் ராஜாங்கத்திடம் நலம் விசாரித்தார்.
சின்ன மருமகள்:
பின் அவர், தன்னுடைய மகள் திருமணமாகி கொஞ்ச நாளிலே விவாகரத்து வாங்கி வீட்டில் இருந்தார். அந்த மாதிரி இருக்கும் நபர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, தன் மகனை எப்படியாவது கோடிக்கணக்கில் சொத்துள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யோசித்தார். பின் இதைப் பற்றி போஸ் இடம் ஈஸ்வரி சொன்னார். போசுமே சம்மதித்தார். ஈஸ்வரி, நான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீ பல கோடி சொத்துக்கு அதிபதியாக போகிறாய் என்றெல்லாம் சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டார். அப்போது ஓட்டலின் ஓனர், பெரிதாக வேலை செய்ய தேவை இல்லை. பார்சல் கட்டும் வேலை மட்டும் உட்கார்ந்து கொண்டு செய் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வியின் தங்கை, அக்காவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு சேது, நான் எதற்கு சொல்லணும்? உன்னுடைய பிறந்தநாளுக்கு நான் சிறப்பாக கொண்டாடுகிறேன். ஆனால், உன் அக்காவுக்கு என்னால் சொல்ல முடியாது என்றெல்லாம் சொல்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, எம்எல்ஏவின் மகளை போஸுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
சீரியல் ட்ராக்:
எப்படியாவது பேசி முடித்து வையுங்கள் என்று கேட்கிறார். உடனே ராஜாங்கம், மலரை வாழ்க்கை என்னாவது? என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, என் பையனுடன் சேர்ந்து வாழ மாட்டாள் என்று சொன்னது அவள்தான். என் மகனின் வாழ்க்கை வீணடிக்க முடியாது. தயவு செய்து அந்த எம்எல்ஏ மகளுடன் என் மகனை திருமணம் செய்து வையுங்கள் என்கிறார். அதற்கு ராஜாங்கம், நான்பார்க்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பின் தமிழின் பிறந்தநாள் என்பதால் கல்லூரியில் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது