சேதுவை திருமணம் செய்து கொள்ள அடித்து கொள்ளும் ஐசு- தாமரை, ராஜாங்கம் முடிவு என்ன? சின்ன மருமகள்

By subhashini · 11/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் வீட்டில் அப்பத்தா, சேதுவின் முடிவை பற்றி யோசிக்க சொல்லுங்க என்றார். ராஜாங்கம், சேது எந்த முடிவெடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் சேது வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்றார். இதை கேட்டு ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். ஈஸ்வரி, எப்படியாவது ஐஸ்வர்யாவை சேதுவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற திட்டம் போட்டார். அதே போல் சாவித்ரி, தன் மகளுக்கு விவாகரத்து வாங்கி வைத்துவிட்டு சேதுவுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.

சேது, வெற்றி பெற்றதால் மற்ற கட்சிகளில் உள்ள எல்லோருமே தன்னுடைய கட்சியில் சேர்ந்து கொள்ள கேட்டார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே சேதுவை கட்சியில் சொன்னார்கள். ராஜாங்கம், எதுவாக இருந்தாலும் சேது முடிவெடுக்கட்டும் என்றார். கடைசியில் சேது, நான் தனியாகத்தான் இருக்கப் போகிறேன். என் அப்பாவிற்கு பிரச்சினை வரும்போது யாருமே எங்களுக்கு துணையாக இல்லை. நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று சொல்லி விட்டார். அதற்குப்பின் தாமரை- காமேஷ் இருவரையும் பிரித்து விடுவதாக சொல்லி பஞ்சாயத்து நடக்கிறது.

சின்ன மருமகள்:

காமேஷ் ரொம்பவே கெஞ்சி கதறுகிறார். ஆனால் தாமரை முடியாது என்றார். கடைசியில் இருவரையும் பிரித்து விட்டார்கள். அந்த சமயம் பார்த்து காமேசுக்கு லாட்டரி டிக்கெட் வின் பண்ணுவதால் லட்சாதிபதி ஆனார். அதற்குப்பின் ஈஸ்வரி, தமிழுக்கு போன் செய்து வம்பு இழுத்தார். கோபத்தில் தமிழ்ச்செல்வி, சரியான பதிலடி கொடுத்து ஈஸ்வரியின் வாயை மூட வைத்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் தாமரை காமேஸ் பிரிந்த விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சாவித்திரி, என் மகளுக்கு அந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. அவன் எங்களை ஏமாற்றி விட்டான். என் மகள் இனிமேல் அவன் பொண்டாட்டியில்லை. சேதுவும் இப்போது தனிமரமாக நிற்கிறான். ஆனால், என் மகளை திருமணம் செய்து வையுங்கள். நாம் இருவரும் சம்மந்தியாகலாம் என்று சொல்கிறார். ராஜாங்கம் எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். ஈஸ்வரி அதெல்லாம் முடியாது என்று சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேதுவிற்கு இன்னொரு கல்யாணம் ஏற்பாடு செய்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

நான் சொல்லும் போது ஆட்களை ரெடி பண்ணுங்கள். நாம் அவர்கள் வீட்டுக்கு போகணும் என்று சொல்கிறார்.
மாணிக்கம் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேது திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஈஸ்வரி- சாவித்திரி இருவருமே மாற்றி மாற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜாங்கம், சேது உடைய முடிவு தான் என்னுடைய முடிவு. அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறாரோ எனக்கு அது சம்பந்தம் என்று சொல்லி விடுகிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full