வீட்டை விட்டு ஒடி போகும் தாமரை, கையும் களவுமாக பிடித்த ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், ஜெனி அப்பா- அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம். ஏதாவது செய்ய முயற்சி செய்கிறேன் என்றார். அதற்குப்பின் தமிழ், சேது இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டார்கள். அங்கு சக்தி, தமிழை சந்தித்து ஜெனியை பற்றி விசாரித்தார். தமிழ், ஜெனிக்கு நடக்கும் திருமணம் ஏற்படுகளைப் பற்றி சொன்னார். சக்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரையின் திருமணத்திற்காக ராஜாங்கம் நகை, புடவை எல்லாம் வாங்கி தந்தார். தாமரை தன் காதலைப் பற்றி வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
போனில் தாமரை, என்னுடைய மாமா 100 பவுன் நகை. 2 லட்சத்தில் புடவை வாங்கித் தந்திருந்தார். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார். உடனே காமேஷ், நான் உனக்கு ஆயிரம் பவுனில் தங்கம், 2 கோடியில் புடவை என்று தயார் செய்து இருக்கிறேன். வெறும் இந்த பணத்திற்கு இப்படி சந்தோஷப்படுகிறாய் என்று பில்டப் கொடுத்தார். இதைக் கேட்டு தாமரை- சாவித்திரி இருவரும் வாயை பிளக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி- சித்ரா இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழுக்கு பசிப்பதால் சேது சரியாக சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார்.
சின்ன மருமகள்:
பின் சேது-தமிழ் இருவருமே ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய காதலை பரிமாறி கொண்டார்கள். அதற்குப்பின் தமிழ்-சேது இருவரும் தாமரையை பார்த்து திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி அறிவுரை எல்லாம் செய்தார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் தாமரை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் போனில் தாமரை, திருமணத்தை எப்படி தடுப்பது? என்றார். காமேஷ் பிச்சை, நீ தயாராக இரு. காலையில் என்னுடைய ஆட்கள் உன்னை அழைத்துக் கொண்டு வருவார்கள். கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். தாமரையும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரை விடை விட்டு கிளம்பத் திட்டம் போடுகிறார். சாவித்திரி அதற்கு துணையாக இருக்கிறார். இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி- சித்ரா இருவரும் வீட்டு வாசலில் பாயை போட்டு படுத்து கொள்கிறார்கள். இதை பார்த்து தாமரைக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி சாவித்திரி, ஈஸ்வரிடம் விசாரிக்கிறார். அதற்கு ஈஸ்வரி, என் கனவில் யாரோ ஓடிப்போவது போல் இருந்தது. அதனால் தான் இங்கே படிக்கிறேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் தாமரை எதுவும் பேசாமல் ரூமுக்கு வந்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ்- சேது இருவரும் சந்தோஷமாக தாமரையை பற்றியும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்குப்பின் தாமரை வீட்டில் நடந்ததை பற்றி காமேஷிடம் சொல்கிறார். அதற்கு காமேஷ், நீ தயாராக இரு. நான் நல்ல ஒரு ஐடியா யோசிச்சிட்டு உன்னிடம் சொல்கிறேன் என்கிறார். அதற்கு பின் தாமரை பின் வாசல் வழியாக கிளம்பப் பார்க்கிறார். அங்கேயும் ஈஸ்வரி வந்து தடுத்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் தாமரை குழப்பத்தில் இருக்கிறார்.