ஈஸ்வரி தலையில் இடியை போட்ட போஸ், உண்மையை கண்டுபிடிக்க போராடும் சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, தன்னிடம் போஸ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சாவித்திரி பயங்கரமாக கோவப்பட்டார். அதற்கு தாமரை, போஸை கையும் களவுமாக மாட்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த வைக்க வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. நீ காவியா உடைய போன் நம்பரை மட்டும் எப்படியாவது எடுத்து வந்து விடு என்றார்.
அதற்கு சாவித்திரி, ஈஸ்வரி போனில் நம்பரை எடுக்கப் போனார்.
தாமரை, போன் செய்து போஸை ரூமிற்கு அழைத்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, சாவித்திரி சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து என்னமோ நடக்கப் போகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழ் நடந்து கொண்டதை பற்றி ஜெனி கேட்டார். அதற்கு தமிழ், என் எங்கு பார்த்தாலும் என் கணவர் ஞாபகமாக இருக்கிறது என்றார். அதற்கு ஜெனி, இதுக்கு பெயர்தான் காதல் என்று தமிழை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவியா, சேதுவின் வீட்டிற்கு வந்து விட்டார். இதை அறிந்த தாமரை, போஸிடம் நடித்தார். போஸ், தாமரிடம் நெருக்கமாக போக பார்த்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
உடனே தாமரை, இதெல்லாம் தவறு. வேண்டாம், உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்றெல்லாம் நடித்தார். ஆனால், போஸுக்கு காவியா வந்திருப்பது தெரியாமல் திருமணத்தை பற்றியும் காவியாவை பற்றியும் கேவலமாக பேசிக்கொண்டு தாமைரிடம் நெருக்கமாக போனார். உடனே கோபத்தில் காவியா ரூமிற்குள் வந்துவிட்டார். போசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பயத்தில் உளறினார். கோபத்தில் காவியா, போஸை அடித்துவிட்டு இவ்வளவு கேளாமகேவலமானவனா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையெல்லாம் பார்த்து தாமரை-சாவித்ரி இருவருக்குமே சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய குழந்தைக்காக தான் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து வருத்தப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்லர் போய்விட்டு ஈஸ்வரி, சித்ரா எல்லோருமே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது சாவித்திரி, உன் மகன் செய்த வேலையைப் பற்றி போய் கேள். இந்த கல்யாணம் நடக்குமானே தெரியவில்லை என்று நக்கலாக பேசுகிறார். பின் ஈஸ்வரி, போஸ் இடம் விசாரிக்கிறார். அப்போது போஸ் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி, போஸை அடிக்கிறார். பின் ஈஸ்வரி, காவியாவிற்கு ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டு பேசுகிறார். அதற்கு காவியா, இவ்வளவு கேவலமான மகனை பெற்றுவிட்டு நீங்கள் பேசுகிறீர்களா? உங்களை என்ன செய்கிறேன் பார் என்று திட்டிவிட்டு ஃபோனை வைத்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் ஈஸ்வரி, கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயத்திலேயே இடிந்து போய் உட்கார்ந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் சேது, போஸின் முகத்திரையை கிழிக்க என்ன செய்வது என்று புரியாமல்
புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது தமிழ்செல்வி, எனக்கு எந்த கஷ்டம் என்றாலும் அந்த தெய்வத்திடம் தான் வேண்டுவேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த சாமியிடம் முறையிடுங்கள். அதற்கான வழியை கடவுளே காண்பிப்பார் என்று சொல்கிறார். பின் சேது, தன்னுடைய சாமியிடம் போஸின் முகத்திரையை கிழிப்பதற்கு வேண்டிக்கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.