குழந்தையால் சேது-கருப்பன் இடையே வெடித்த கலவரம், கொந்தளிக்கும் ஐசு - சின்ன மருமகள்

சேது-கருப்பன் இடையே சண்டை

By subhashini · 5/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, நல்ல நேரம் முடிந்துவிட்டது. திருமணத்தை எல்லாம் இப்போது நடத்த முடியாது என்று சொன்னார். மோகனா, என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்று கேட்டார். சேதுபதி, ஆண் குழந்தை என்று சொன்னார். ராஜாங்கம் சந்தோசப்பட்டார். அதற்குப்பின் கல்யாணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று ஈஸ்வரி சொன்னார். சாவித்திரி நடத்தக்கூடாது என்று பிரச்சனை செய்தார். சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ஈஸ்வரியின் மகள், அப்பத்தா உள்ளே வந்தவுடன் நான் ரொம்பவே பயந்து விட்டேன். நீ சொன்னவுடனே சேது தாலியை ஐசு கழுத்தில் வைத்திருந்தான், கட்டவில்லை. நான்தான் மூன்று முடிச்சியுமே போட்டேன் என்றார். ஈஸ்வரி, ஐசு திருமணம் நடந்து விட்டது. அவனுமே நம்பி விட்டான் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, கண்விழித்து என்னுடைய இரண்டு குழந்தைகளில் ஒன்று இருக்கு. இன்னொன்று எங்கே? என்றார். அப்பத்தா ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், தமிழ்ச்செல்வி ஒத்துக் கொள்ளவே இல்லை.

சின்ன மருமகள்:

கடைசியில் அப்பத்தா, குழந்தை சேதுவிடம் கொடுத்த விஷயத்தை சொல்லி விட்டார். இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, அப்பத்தாவை திட்டி குழந்தையை அழைத்து வருவதற்கு சென்னார். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தமிழ்ச்செல்வி மயங்கி கீழே விழுதார். பின் டாக்டர், எல்லோரையும் திட்டி விட்டு தமிழ் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ள சொன்னார்கள். இன்னொரு பக்கம் ஐசு-சேதுவிற்கு தேவையான சடங்குகள் எல்லாம் செய்தார்கள். அப்போது குழந்தை அழுது கொண்டிருப்பதால் சேது முழு மனதுடன் எந்த சடங்கையும் செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன் மகனை நினைத்து தமிழ் செல்வி ரொம்பவே வருத்தப்படுகிறார். வீடியோ கால் மூலம் தன்னுடைய மகனை பார்த்து தமிழ் செல்வி சந்தோஷப்பட்டு பாட்டு பாடி தூங்க வைக்கிறார். அதற்கு பின் சேது முதலிரவுக்கு சென்றிருக்கும் விஷயத்தை அறிந்து தமிழ் செல்வி கொந்தளிக்கிறார்.அதற்கு பின் ஐஸ்வர்யா கனவுடன் இருக்கிறார். சேது, இதெல்லாம் தேவையில்லை என்று அந்த ரூமை விட்டு வெளியே வந்து விடுகிறார். இதைப்பற்றி ஐஸ்வர்யா, ஈஸ்வரிடம் சொல்லி அழுது புலம்புகிறார். சேதுவை சந்தித்த ஈஸ்வரி, ஐசுவை பற்றி ரொம்ப பெருமையாகவும் தமிழை மோசமாகவும் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் கோபப்பட்ட சேது, எனக்கு என்ன முடிவு எடுக்கணும் என்று தெரியும் என்று சொல்லிவிடுகிறார். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் அப்பத்தா குழந்தைக்கு காப்பு மோதிரம் எல்லாம் வாங்கி வந்து போடுகிறார். தமிழ் செல்வி, அப்பத்தாவை திட்டி விடுகிறார். அதற்குப்பின் கருப்பன், மலர் இருவரும் குழந்தையை சேது ரூமில் வைக்கிறார்கள். குழந்தை அழுது கொண்டிருக்கிறது. சேது, ஒழுங்கு மரியாதையாக குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போங்க என்று திட்டுகிறார். கருப்பன், குழந்தை அம்மாவிடம் இருக்கணும் இல்லையென்றால் உன்னிடம் இருக்கணும் என்று வாக்குவாதம் செய்கிறார். இருவருக்கும் சண்டை நடக்கிறது. ஒரு கட்டத்தில் மலர் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full