வெளிவந்த காமேஷ் பிச்சையின் சுயரூபம், அதிர்ச்சியில் உறைந்த தாமரை - பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, தாமரையை தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக ரூமிலேயே இருந்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். காமேஷ் போன் சுவிட்ச் ஆப்பாக இருப்பதால் தாமரை ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். அப்போது வந்த தமிழ், தாமரையை மேடைக்கு அழைத்தார்கள் என்றார். இதனால் தாமரை-சாவித்ரி பதறுகிறார்கள்.
தாமரை மணமேடைக்கு சென்று புடவை வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்து விட்டார். காமேஷ் பிச்சை ஃபோன் எடுக்கவில்லை என்று தாமரை ரொம்பவே புலம்பி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரொம்பவே எமோஷனலாகி அழ ஆரம்பித்து விட்டார். அந்த சமயம் பார்த்து காமேஷ் பிச்சை ஃபோன் எடுத்து ஒரு மூட்டைக்குள் இருப்பதாக சொன்னார். பின் அந்த ரூமுக்குள் இருக்கும் முட்டையை திறந்தால் காமேஷ் பிச்சை இருந்தார். தாமரை சந்தோசப்படுகிறார். பின் இருவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போட்டார்கள்.
சின்ன மருமகள்:
சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். இன்னொரு பக்கம் தாமரையை அழைத்து வரச் சொல்லி மணமேடையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேது, தமிழ்ச்செல்வி, கருப்பன் மூவருமே தாமரையின் ரூமுக்கு வெளியே நின்று அழைத்தார்கள். உள்ளே காமேஷ், தாமரை கழுத்தில் தாலியை கட்டி விட்டார். பின் அந்த இடத்திற்கு ராஜாங்கமும் வந்து தாமரையை அழைத்தார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சாவித்திரி -தாமரை இருவரும் இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராஜாங்கம் கதவை திறக்க சொல்லி கத்துகிறார். தாமரை- சாவித்திரி இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே கதவை திறக்க சொல்கிறார்கள். முதலில் சாவித்திரி வந்தார். பின்னாடி தாமரை வருகிறார். தாமரை கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து ராஜாங்கம் குடும்பம் ஷாக் ஆகிறது. தாலி கட்டியது யார்? என்ன ஆனது? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அப்போது காமேஷ் பிச்சை வெளியே வருகிறார்.
சீரியல் ட்ராக்:
சாவித்திரி, இவர் பெரிய பணக்காரர் என்றெல்லாம் பில்டப் கொடுக்கிறார். அப்போது அங்கிருந்த பிச்சைக்காரர்கள், காமேஷ் பற்றி எல்லா உண்மை சொல்லிவிடுகிறார்கள். காமேஷ், நான் தாமரையை காதலிக்கிறேன். அதனால் தான் இப்படி பொய் சொல்லி கல்யாணம் செய்தேன் என்று எல்லா உண்மையும் சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி சொல்லி தான் செய்தேன் என்று காமேஷ் சொல்லவில்லை. இது எல்லாம் கேட்ட தாமரை ஷாக்காகி அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். ராஜாங்கம், சேது எல்லோருமே பயங்கரமாக திட்டுகிறார்கள்.