தாமரையை வைத்து காமேஷ் போட்ட புது திட்டம், சேது செய்யும் அட்ராசிட்டி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 10/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்க சேதுபதி விசாரித்தார். அப்போ தமிழ் செல்வி, நான் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டேன். என்னால் ஒரு உயிர் போனவிட்டது. அந்த பாவம் எனக்கும் என் குழந்தைக்கும் வந்துவிடும் என்று ஏதேதோ சொல்லி அழுதார். சேது, கோழி ஆட்டை சாப்பிடும் போது பாவம் வரவில்லையா? என்று கேட்டவுடன் தமிழ்ச்செல்வி கோபப்பட்டு கத்தினார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே பரிகாரம் நல்லபடியாக நடந்து முடிந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஈஸ்வரி, கோயிலுக்கு சென்றிருந்தால் பரிகாரம் நன்றாக இருந்திருக்கும் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். கோபத்தில் அப்பத்தா, ஈஸ்வரியை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருப்பதால் அதிகமாக கோபப்பட்டார், அழுகிறார், கத்துகிறார். சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இதைப்பற்றி சேது, அப்பத்தாவிடம் சொன்னார். அதற்கு அப்பத்தா, மாசமா இருக்கும்போது எல்லா பெண்களுக்கும் குணங்கள் அப்படித்தான் இருக்கும். நீ தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொன்னார். தமிழ்ச்செல்வி, அந்நியன்- அம்பிப்போல் மாறி மாறி நடந்து கொள்வதால் சேது கோவப்படாமல் நிதானமாக தமிழ்செல்வி இடம் பேசி இருந்தார்.

சின்ன மருமகள்:

சேது, உனக்கு ஏதாவது ஆசைகள் இருந்தால் சொல். அதை நிறைவேற்றுகிறேன் என்று கேட்கிறேன். தமிழ்ச்செல்வி, எனக்கு சின்ன சின்ன ஆசை நிறைய இருக்கு. முதலில் இரவு நேரத்தில் பன் பரோட்டா சாப்பிடணும் என்றார். உடனே சேது, தமிழை அழைத்துக் கொண்டு கடைக்கு போய் பரோட்டா வாங்கித் தந்தார். பின் இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றுகிறார்கள். தமிழ்செல்வி கேட்பதையெல்லாம் சேது கொடுத்தார். தமிழ்ச்செல்வியின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. சேதுவும் மனம் தளராமல் தமிழுக்காக செய்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தேவையில்லாததையெல்லாம் சேது வாங்கி தந்ததால் தமிழ் செல்விக்கு வயிறு வலி எடுத்து விடுகிறது. பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேதுவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் காமேஷ் தன்னுடைய தொழிலுக்கு கிளம்ப தயாராகிறார். அப்போது தன்னுடைய மாமியார் சாவித்திரி, தாமரை இருவரையும் தன் மொபைலில் போட்டோ எடுத்துக் கொள்கிறார். பின் அதை காமேஷ் பிரேம் எடுத்து கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

காமேஷ், அதை தான் பிச்சை எடுக்கும் இடத்தில் வைத்துக் கொள்கிறார். சாவித்திரிக்கு பேச தெரியாது,தாமரைக்கு கண் தெரியாது என்று பொய் சொல்லி பிச்சை கேட்கிறார். நினைத்ததை விட நிறைய பணம் காமேஷுக்கு கிடைக்கிறது. இதனால் அவர் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் தமிழ், இனிமேல் என்னுடைய ஆசைகளைப் பற்றி கேட்காதீர்கள். நீங்கள் தண்ணீர் பழத்தை வயிற்றில் கட்டி இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை என்று சொல்கிறார். சேதுவும் தமிழ் சொன்னது போல் தண்ணீர் பழத்தை தன் வயிற்றில் கட்டிக்கொண்டு எல்லா வேலைகளையும் செய்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சேதுவை திட்டுகிறார்கள். இருந்தாலும் சேது கண்டு கொள்ளவில்லை.

behindtalkies AMP · Quick view
View full