சிறப்பாக நடந்து முடிந்த கண்மணி-ஆறுமுகம் திருமணம், ஈஸ்வரி நிலை என்ன? சின்ன மருமகள்

By subhashini · 14/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கண்மணி, ஆறுமுகத்தை தான் திருமணம் செய்து கொள்வேன். அண்ணி நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்ததால் தான் இங்கு வந்தேன். நாங்கள் கல்யாணம் செய்ய போனதற்கும் அண்ணிக்கும் சம்மந்தமே இல்லை என்று சொன்னார். இதை கேட்டு சேது அமைதியாகி விட்டார். பின் கோபத்தில் ஈஸ்வரியின் கணவர், ஆறுமுகத்தை அடித்து வெளியே துரத்தி விட்டார். கண்மணி எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. பின் சேது, கண்மணிக்காக சப்போர்ட் செய்து பேசி இருந்தார். ஆனால், ஈஸ்வரி ஒத்துக் கொள்ளவே இல்லை.

ராஜாங்கம் மாப்பிள்ளை வீட்டில் பேசி மாப்பிள்ளையை மணமேடைக்கு போக சொன்னார். உடனே தமிழ் செல்வி, மாப்பிள்ளை நல்லவனே கிடையாது. இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று சொன்னார். கோபத்தில் ஈஸ்வரி, தமிழ்செல்வியை திட்டி வெளியில் போக சொன்னார். அதற்குப்பின் தாமரையின் அம்மா, கருப்பு- தாமரை இருவருமே வந்து கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை பற்றி அவர்கள் ஏதோ சொல்ல வேண்டுமாம். அதுவரை கல்யாணத்தை நடத்த வேண்டாம் என்றார்கள். இதைக் கேட்டு ராஜாங்கத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை அமைதியாக இருந்தார்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி என்னென்னவோ டிராமா செய்து திருமணத்தை நடத்த பார்த்தார். ஆனால், ராஜாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை. உடனே நந்தகுமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. குறை இருக்கும் பெண்ணை கட்டிக்கொள்ளனும் என்று எனக்கு அவசியமில்லை என ரொம்ப மோசமாக கண்மணியை பேசி இருந்தார். அதனால் கோபப்பட்டு சேது, நந்தகுமாரை அடித்து விட்டார். அதற்குப்பின் மண்டபத்திற்கு கருப்பு, தாமரை இருவருமே வந்துவிட்டார்கள். அப்போது கருப்பு- தாமரை இருவருமே நடந்த எல்லாத்தையும் சொன்னார்கள். இதை கேட்டு ராஜாங்கம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தார்கள்.

நேற்று எபிசோட்:

மண்டபத்திற்கு வந்த போலீஸ், நந்தகுமாரையும் அவருடைய குடும்பத்தையும் கைது செய்தது.
ஈஸ்வரி தனக்கு ஒன்னும் தெரியாது போல நந்தகுமார் குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார். கோபத்தில் நந்தகுமாரின் அப்பா, நீ சொத்திற்கு ஆசைப்பட்டு சொன்னதால் தான் நாங்கள் பெண் கேட்க வந்தோம். மற்றபடி எங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே கிடையாது என்று சொன்னார். அதற்குப்பின் தாமரையின் அம்மா, தனக்கு தெரிந்த ஒருவரை மாப்பிள்ளையாக அழைத்து வர, அவரும் பணத்திற்காக ஆசைப்படுகிறார் என்று தெரிந்தவுடன் ராஜாங்கம் வேண்டாம் என்றார். பின் சேது, எல்லா வகையிலும் ஆறுமுகம் தான் கண்மணிக்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்ல, ராஜாங்கம், ஆறுமுகத்தை மண்டபத்திற்கு அழைத்து வர சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நல்லபடியாக ஆறுமுகம்- கண்மணி திருமணம் நடந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். தமிழ்ச்செல்வி திருமணம் நடந்த சந்தோஷத்தில் அங்கு இருந்து சென்று விடுகிறார். அதை பார்த்து சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது ராஜாங்கம், தன் மகளின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி, நான் வேண்டும் என செய்யவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

கோபத்தில் ராஜாங்கம் திட்டுகிறார். பின் ஈஸ்வரியின் கணவர், சாட்டை எடுத்து வந்து தன் மனைவி, மகள் என்று கூட பார்க்காமல் அடிக்கிறார். அதோடு வீட்டை விட்டு கொட்டகையில் இருக்க சொல்கிறார். அதற்குப்பின் அப்பத்தா, நம் வீட்டிற்கு வந்த பிரச்சனையை தமிழ்செல்வி தான் தீர்த்து வைத்தார். அவள் தான் நம் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள். அவளுக்கு விவாகரத்து கொடுத்து அனுப்பி வைக்க வேண்டாம் என்று சொல்கிறார். இதை கேட்டு தாமரையின் அம்மா கோபப்பட்டு திட்டுகிறார். உடனே அப்பத்தா, தாமரையின் அம்மா செய்த வேலையைப் பற்றி பேசுகிறார். பின் ராஜாங்கம், சந்தோசமான நேரத்தில் தேவையில்லாமல் பேச வேண்டாம் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full