கோபத்தில் தமிழை அடிக்க போகும் சேது, உண்மையை சொன்னாரா கண்மணி? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் நந்தகுமாரின் நண்பர்கள் இருக்கும் அறைக்கு கருப்பு, தாமரை போலீசை வர வைத்து விட்டார்கள். நந்தகுமார் நண்பர்கள் தப்பிப்பதற்கு முன்பு போலீஸ் அவர்களை பிடித்து விட்டது. உண்மையை கேட்டு போலீஸ் வெளுத்து வாங்குகிறார்கள். அப்போது ஓட்டலுக்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டும் உண்மையை போலீஸ் அறிந்து கொள்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணி நந்தகுமார் என்றும் தெரிந்து கொண்டார்கள்.
பின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக போலீஸ், கருப்பு, தாமரை எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது தாமரை, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்தது எல்லாம் சொல்லி, உன்னுடைய சொந்தக்காரர் மாப்பிள்ளையை தயாராக சொல் என்றார். இன்னொரு பக்கம் கருப்பு, தமிழ் செல்விக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னவுடன் தமிழ்ச்செல்வி மண்டபத்திற்கு கிளம்பினார். இன்னொரு பக்கம் கண்மணி- ஆறுமுகம் இருவருமே மண்டபத்திற்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றார்கள். மண்டபத்தில் சேது அம்மா, கண்மணி இன்னும் வரவில்லை என்று புலம்பி கொண்டிருந்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
கண்மணி மண்டபத்திற்கு இன்னும் வரவில்லை என்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்துவிட்டது. இதனால் கண்மணி அம்மாவிடம் விசாரித்தார். பின் ஈஸ்வரியின் கணவர் கண்மணியை தேடி அலைந்து விட்டு மண்டபத்திற்கு வந்தார். அப்போது அவர், கண்மணியை எங்குமே காணவில்லை காணவில்லை என்று சொன்னார். இந்த விஷயம் ராஜாங்கத்திற்கு தெரிந்து விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் ராஜாங்கம் ரொம்பவே பதறினார். இன்னொரு பக்கம் ஆறுமுகம், கண்மணியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்.
நேற்று எபிசோட்:
அங்கு இருவரும் மாலை மாற்றி, ஆறுமுகம் கண்மணிக்கு தாலி கட்ட போனார். அந்த சமயம் வந்த தமிழ்ச்செல்வி, திருமணத்தை நிறுத்தி நீ செய்வது ரொம்ப தவறு கண்மணி. நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி எல்லோர் சமூகத்துடன் கல்யாணம் நடக்க வேண்டும். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள். நாம் மண்டபத்திற்கு போகலாம் கிளம்பு என்றார். தமிழ்ச்செல்வி செல்வதை கேட்டு ஆறுமுகம் மனம் மாறி மாலையை கழட்டி போட்டார். பின் தமிழ், கண்மணி, ஆறுமுகம் மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கருப்பு, தாமரை இருவருமே மண்டபத்திற்கு அவசர அவசரமாக ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கல்யாண பெண் காணவில்லை என்று மண்டபத்தில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜாங்கத்திற்கு போன் செய்தவர் ஆறுமுகம், கண்மணிக்கு திருமணம் நடந்து விட்டது. அதை நடத்தி வைத்ததே தமிழ்ச்செல்வி தான் என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் கொந்தளித்த சேது, தமிழ்செல்வியை வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே இது தான் சந்தர்ப்பம் என்று தாமரையின் அம்மாவும், ஈஸ்வரியும் தமிழை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து தமிழ்செல்வி, கண்மணி- ஆறுமுகத்தை அழைத்து வருகிறார் இதனால் மண்டபத்தில் உள்ள எல்லோருமே தமிழ்செல்வியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தில் சேது, தமிழை அடிக்கப் போகிறார். உடனே தடுத்து நிறுத்திய கண்மணி, எனக்கு கல்யாணம் நடக்கவே இல்லை. என் கழுத்தில் தாலி இருக்கிறதா? பாருங்கள் என்று சொல்கிறார். அதற்குப் பிறகுதான் சேது அமைதியானார். பின் கண்மணி, நான் ஆறுமுகத்தை காதலிக்கிறேன். எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. இருந்தாலும் என்னுடைய சம்மதம் கேட்காமல் முடிவு செய்துவிட்டார்கள். இதை பற்றி அண்ணியிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை என்று நடந்ததை சொல்லி அழுகிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.