ஆறுமுகத்தின் சுயரூபத்தை அறிந்த கண்மணி, மருத்துவ முகாமிற்கு செல்லும் ராஜாங்கம் குடும்பம் - சின்ன மருமகள்

By subhashini · 22/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்று அவருடைய எதிரியும் போஸும் சேர்ந்து சேது-தமிழின் விவாகரத்தை பற்றி பிரஸ்மீட்டில் பேச சொன்னார்கள். அப்போது பேட்டி எடுப்பவர்கள் ராஜாங்கத்திடம், சேது-தமிழ் விவாகரத்தை பற்றி கேட்டார்கள். ராஜாங்கம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். உடனே அங்கு வந்த தமிழ், அதற்கு பதில் நான் சொல்கிறேன் என்றார்.

தமிழ்ச்செல்வி, விவாகரத்து என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை. எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து என்னுடைய கல்விக்கு என்னுடைய மாமனார் பெரும் உதவியாக இருந்தார். அந்த மாதிரி தான் இவர் இதையும் செய்தார். மற்றபடி நீங்கள் சொல்வது போல் விளம்பரத்திற்காக அவர் செய்யவில்லை. என்னுடைய குடும்பம் எனக்கு துணையாக தான் இருக்கிறது என்றார். அதற்குப்பின் சேது, தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் எல்லோருமே வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, கேம்ப் போகும் விஷயமாக ராஜாங்கத்திடம் சொன்னார். பின் அவர், சேதுவை அழைத்து போக சொன்னார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கட்சி தலைவரின் மனைவி, மருத்துவ கேம்பிற்கு ராஜாங்கத்தையும் போக சொன்னார். அதனால் அவர் ஒத்துக் கொண்டார். பின் குடும்பத்துடன் எல்லோருமே கேம்புக்கு செல்ல தயாராகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மெடிக்கல் ஷாப் போகணும் என்பதால் தமிழ்ச்செல்வியின் தங்கை சேது விடம் உதவி கேட்டார். ஆனால், அவர் கோபத்தில் கத்தினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் தமிழின் தங்கை, நான் உங்களை மாமாவாக தான் நினைக்கிறேன். உங்களுக்கும் இருக்கும் பிரச்சனைக்கு எனக்கு தெரியாது என்று சொல்கிறார். இதனால் மனம் மாறிய சேது, தமிழின் தங்கைக்கு உதவுகிறார். அதற்குப்பின் எல்லோரும் கேம்ப் போகும் விஷயத்தைப் பற்றி தாமரையும் அவருடைய அம்மாவும் ஈஸ்வரிடம் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஈஸ்வரி, அவருடைய மகளும் கேம்ப் போவதற்காக தயாராகுகிறார்கள். இன்னொரு பக்கம் ஆறுமுகம் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். இதை பார்த்த கண்மணி கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு ஆறுமுகம், நண்பர்கள் பார்ட்டி கேட்டார்கள் கொடுத்தேன் , அப்படித்தான் குடித்துவிட்டு வருவேன். அதை நீ பழகிக்கொள் என்று திமிராக பேசுகிறார். இதை பார்த்து கண்மணிக்கு கோபம் தான் வருகிறது. மறுநாள் காலையில் மருத்துவ முகாமிற்கு ராஜங்கம் குடும்பத்தில் எல்லோருமே கிளம்புகிறார்கள். ஆனால், ஆறுமுகம் மட்டும் போகவில்லை. ஈஸ்வரியும் அவருடைய மகளுமே கிளம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full