கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் கண்மணி, மாப்பிளை பற்றிய உண்மையை அறிவாரா சேது? சின்ன மருமகள்

By subhashini · 24/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியை அழைத்த கல்லூரி பேராசிரியர், நீ எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாய் என்பது எனக்கு தெரியும். நல்லபடியாக மதிப்பெண் எடுத்து உனக்கான பீஸை நீயே கட்டிக் கொள். நீ நன்றாக படிக்கும் மனைவி என்று தெரியும் என அறிவுரை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வியின் பள்ளி தோழன், தமிழ்ச்செல்வியின் தோழி இடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதை அறியாமல் சேது அவரை பார்த்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், சேது அந்த நபரை அடித்தாரா? இல்லையா? என்ன செய்தார்? என்று தெரியவில்லை.

உடனே சேது வீட்டில் ராஜாங்கம் மகள் கண்மணிக்கு பெண்பார்க்கும் விஷயமாக பேசினார்கள். ஆனால், கண்மணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. கண்மணி வீட்டில் வேலை செய்யும் ஆறுமுகத்தை தான் காதலிக்கிறார். இருந்தாலும் பெற்றோர்கள் சொன்னதால் தயாராகி வந்தார். மாப்பிள்ளை வீட்டாருக்கு கண்மணியை பிடித்துப் போய் விட்டதாக சொன்னார்கள். அப்போது மாப்பிள்ளை அப்பா, எனக்கு ஒரே கண்டிஷன் தான். கல்யாணத்தை எளிமையாக செய்ய வேண்டும். ஒரே வாரத்தில் கல்யாணத்தை முடித்து இருவரையும் ஃபாரின் அனுப்ப வேண்டும் என்று சொன்னார். இதனால் ராஜாங்கமும் சம்மதித்தார்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் கண்மணியின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் என்பதால் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டார்கள். இதையெல்லாம் பார்த்து ஆறுமுகம் மனதுக்குள்ளே வேதனைப்பட்டு கொண்டிருந்தார். அதற்குப்பின் ரூமிற்கு வந்த ஆறுமுகத்திடம் கண்மணி, என்னுடைய விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. நான் என்ன செய்வது என்று புலம்பி அழுதார். அதற்கு ஆறுமுகம், உங்கள் வீட்டில் சொல்வதைப் போல் செய் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சேதுவை பார்க்க தாமரையும் அவர் அம்மாவும் வந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது தாமரையின் உடைய அம்மா, தமிழ்செல்வியை பற்றி ஒரு தவறான வீடியோவை காண்பித்தார். அதை பார்த்து சேது கோபப்படவில்லை. உடனே பதிலுக்கு ஒரு வீடியோவை சேது காண்பித்தார். அதில், நான் தமிழ்செல்வியை ஒருதலையாக காதலித்து உண்மைதான். ஆனால், அவள் காதலிக்கவில்லை. என்னை அவர் அண்ணா என்றுதான் அழைக்கிறார். நான் அவரை என் தங்கையாக தான் பார்க்கிறேன் என்று சொன்னார். இதை எல்லாம் பார்த்து தாமரையும் அவருடைய அம்மாவும் வாயடைத்து போனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்செல்வியை பார்த்து கண்மணி, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. யாருமே என் விருப்பத்தை கேட்கவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுங்கள் அண்ணி என்று ரொம்பவே கதறி அழுகிறார். அதற்கு தமிழ்ச்செல்வி, நான் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் சேதுவை பார்த்து தமிழ்ச்செல்வி, கண்மணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டீர்களா. அவள் யாரையாவது காதலிக்கிறாளா? என்று கேட்டு திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட சேது, என் தங்கை ஒன்றும் அப்படிப்பட்டவள் கிடையாது.

சீரியல் ட்ராக்:

உன்னை காதலித்த பாவத்திற்கு தான் நான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன். நீ என் குடும்ப விஷயத்தில் தலையிடாதே என்று தமிழ்செல்வியை திட்டி அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் சேதுவின் சித்தி ஈஸ்வரி,
மாப்பிள்ளையின் அப்பாவிற்கு ஃபோன் செய்து திருமண சொத்தில் டீலிங் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை ஒரு ஹோட்டலில் தன்னுடைய நண்பர்களிடம் குடித்துக்கொண்டு மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஹோட்டலுக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து அவர்களிடம் தவறாகவும் நடக்கிறார்கள். இது தெரியாமல் சேது தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஆறுமுகத்திடம் சேது, கண்மணி யாரையாவது காதலிக்கிறாரா? என்றெல்லாம் விசாரிக்கிறார். அதற்கு ஆறுமுகம், அவர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full