தாமரைக்கு பாடம் புகட்டிய கருப்பன், ராஜாங்கம் கொடுத்த பொங்கல் பரிசு - சின்ன மருமகள்

By subhashini · 13/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஐஸ்வர்யா, ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, நீ சேது- தமிழை பிரித்துவிடு. சேதுவை கல்யாணம் செய்து கொள் என்று தேவையில்லாத ஐடியா கொடுத்தார். அதற்குப்பின் போகி பண்டிகை என்பதால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எரித்தார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகைக்கு மொத்த வீடுமே அலங்காரம் செய்து கோலாகலமாக இருக்கிறது. வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

ராஜாங்கம் வீட்டில் சிறப்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் வைத்து எல்லோரும் சாமி கும்பிட்டு சந்தோசமாக இருந்தார்கள். அப்போது தாமரை, கரும்பு உடைக்கும் போட்டி வைக்கலாம் என்று சொல்லி ஒவ்வொரு ஆண்மகன்களையும் அழைத்தார். எல்லோருமே ஒரு கரும்பை உடைத்து விட்டார்கள். இரண்டு, மூன்று கரும்பு சேர்த்து உடைக்கும் போது போஸ், கருப்பன் கையெல்லாம் அடிபட்டு விட்டது.

சின்ன மருமகள்:

சேது மட்டும் அசால்டாக உடைத்தார். உடனே தாமரை, பத்து கரும்பையும் சேர்த்து உடைக்கணும் என்று சொல்லிவிட்டார். முதலில் சேதுவால் உடைக்க முடியவில்லை. உடனே ராஜாங்கம், சேது உடன் சேர்ந்து அந்த கரும்பை உடைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் கருப்பன், தன்னுடைய கையை உடைத்த தாமரைக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று தனத்துடன் சேர்ந்து திட்டம் போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கருப்பன், போட்டியில் தோற்றுவிட்டதாக சொல்லி தமிழ், காவியா, தனத்திடம் பணம் வாங்கினார். இதை கவனித்த தாமரை, என்ன பந்தயம் என்று கேட்டார். கருப்பன், நாங்கள் கொடுக்கும் கரும்பை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கணும் என்று சொல்கிறார். உடனே அந்த பந்தயத்திற்கு தாமரை, சித்ரா இருவரும் ஒத்து கொண்டு எல்லா கரும்பையும் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கிறார்கள். பின் எரிச்சல் தாங்க முடியாமல் இருவரும் கத்துகிறார்கள். அங்கிருந்து கருப்பன் எஸ்கேப் ஆகி விடுகிறார். அதற்குப்பின் வெளிநாட்டில் இருந்து சிலர் பொங்கல் கொண்டாடுவதற்கு ராஜாங்கம் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அவர்களை ராஜாங்கம் குடும்பத்தினர் அன்பாக வரவேற்று கவனிக்கிறார்கள். பின் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ராஜாங்கம், கார்- தங்க காசுகளை பரிசாக கொடுக்கிறார். பின் இதை தமிழ்ச்செல்வி- சேது பெயரில் கொடுக்க சொல்கிறார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full