தீவிரமாக விசாரிக்கும் கருப்பு, கண்மணி வாழ்க்கையை காப்பாற்றுவாரா தமிழ்ச்செல்வி? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி மகள், மாப்பிள்ளை நல்லவர் தானே என்று கேட்டார். அதற்கு ஈஸ்வரி, அது தெரியாது. எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று இந்த சம்மந்த்தை ஒத்துக் கொண்டேன் என்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை பார்த்த கருப்பன், வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். அதனால் தமிழ் சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் பார்த்து ஓட்டலின் ஓனர் திட்டியதால் தமிழ் வேலைக்கு சென்று விட்டார். பின் தமிழ் செல்வி செய்யும் வேலை பார்த்து கருப்பன் ரொம்பவே வருத்தப்பட்டார்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி, கண்மணிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப மோசமானவன். அதைப்பற்றி சேதுவிடும் சொன்னேன். ஆனால், உண்மை வெளிவரவில்லை. நாம் தான் கண்மணியின் வாழ்க்கைக்காக உண்மையை கண்டுபிடிக்கணும் என்று சொல்வதால் கருப்பன் ஒத்துக்கொண்டார். இதை எல்லாம் ஒளிந்து கேட்ட தாமரை, தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். அப்போது தாமரை மாப்பிள்ளை பற்றி விசாரித்து நான் நல்ல பெயர் வாங்கணும் என்றார்.
கடைசியில் சேது, ஈஸ்வரியை சந்தித்து மாப்பிள்ளை பற்றி விசாரித்தார். அதற்கு ஈஸ்வரி, ஏதேதோ சொல்லி அனுப்பி வைத்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் கருப்பு, மாப்பிள்ளையை பற்றி விசாரிப்பதற்காக அவர்களுடைய ஹோட்டலில் தெரியாத நபர் போர் ரூம் எடுத்து தங்கினார். அதே ஹோட்டலுக்கு தாமரையுமே வந்தார். தாமரையை பார்த்தவுடன் மாப்பிள்ளை நந்தகுமார் நண்பர்கள், இன்னைக்கு நல்ல வேட்டை என்று சந்தோசப்பட்டு கொண்டிருந்தார்கள். உண்மை தெரியாமல் தாமரையுமே வசமாக ஹோட்டலில் சிக்கி ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். ஆனால், தாமரைக்கு தெரியாமல் அவர்கள் கேமராவில் வீடியோ எடுக்கிறார்கள்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கருப்பு ஓட்டல் முழுவதுமே ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று தேடிக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் கண்மணி, எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா? னக்கு ஆறுமுகம் தாலி கட்டவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னார். அதற்கு தமிழ்ச்செல்வி, நான் அதற்கான முயற்சியில் தான் இருக்கிறேன். நீ கவலைப்படாதே எல்லோருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்று சொன்னார். பின் போன் செய்த தமிழ்ச்செல்வி, நீங்கள் ஓட்டலில் மட்டும் இல்லாமல் வெளியிடத்திலும் விசாரியுங்கள் என்று கருப்புக்கு ஐடியா சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, வீட்டில் சோகமாக இருக்கிறார். அந்த இடத்திற்கு வந்த தமிழ்ச்செல்வி, கண்மணி திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா, நீ திருமணத்திற்கு வர மாட்டாயா? நீ தான் இதையெல்லாம் எடுத்து செய்யணும் என்று எமோஷனாக பேசுகிறார். உடனே தமிழ்ச்செல்வி, நான் எந்த உரிமையில் வந்து இதையெல்லாம் செய்வது? எங்கிருந்தாலும் கண்மணி வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். இன்னொரு பக்கம் கருப்பு, ஓட்டலுக்கு அருகில் உள்ள பூக்கடை, பானி பூரி கடை, ஆட்டோ ஸ்டாண்ட் என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறார். யாருமே ஓட்டலை பற்றியும் ஹோட்டல் ஓனர் பற்றியும் சரியான தகவலை சொல்லவில்லை. இதனால் கருப்பு என்ன செய்வது என்று புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கருப்புவை பார்த்த ஆட்டோ டிரைவர், இந்த ஓட்டலில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை. இந்த ஓட்டலுக்கு வரும் பெண்கள் எல்லாம் அழுது கொண்டே வெளியே போவார்கள். அந்த ஹோட்டலுக்கு வந்த பெண்களே ஒரு 15 நாள் கழித்து மீண்டும் வருவார்கள். ஆனால், வெளியே வரும்போது அழுது கொண்டுதான் வருவார்கள். என்ன நடக்கிறது? ஏன் அழுகிறார்கள்? என்று தெரியவில்லை என்கிறார். இதை கருப்பு , தமிழ் செல்விக்கு போன் செய்து சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.