கருப்பு சொன்ன விஷயத்தை கேட்டு கொந்தளிக்கும் சேது, குழந்தை என்ன ஆனது? சின்ன மருமகள்

கருப்பு சேது சண்டை

By subhashini · 12/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து கருப்பு, மேனகா எல்லோருமே பதறினார்கள். பின் கருப்பு, சேதுவிற்கு போன் செய்து நடந்ததை சொன்னார். சேது குழந்தை பாசத்தில் கத்துகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சேது நடந்ததை சொன்னார். ராஜாங்கம் கவலைப்பட்டார். அப்போது சேது, இந்த இந்த வேலையை எல்லாம் தமிழ் செல்வி தான் செய்திருப்பாள் என்று தமிழ் செல்விக்கு போன் செய்தார். சேது, குழந்தை எங்கே? என்றார். தமிழ் செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை.

சேது, நீயும் உன் அப்பாவும் சேர்ந்து ஏதாவது திட்டம் போட்டு இருந்தால் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினார். குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து தமிழ் செல்வி கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். தமிழ் செல்வியால் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தை எனக்கு வேண்டும். எப்படியாவது என் குழந்தையை கொடுங்கள் என்று பதறிக் கொண்டிருந்தார். பின் ஹாஸ்பிடலில் சிசிடிவி கேமராவை போலீஸ் செக் பண்ணுகிறார்கள். அதில் ஒரு கிழவி குழந்தையை கடத்திக் கொண்டு போன விஷயம் தெரிகிறது. இதை அறிந்த சேது கொந்தளித்தார்.

சின்ன மருமகள்:

சேது, கருப்பு இருவருமே அந்த கிழவினுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு குழந்தையை தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் வந்த தமிழ்ச்செல்வி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு குழந்தையை தேடி அலைந்தார். ஒரு பக்கம் போலீசும் குழந்தையை தேடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே கஷ்டப்பட்டு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. மனம் உடைந்து போன தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் குழந்தை கிடைக்கவில்லை என்று சேது சொல்கிறார். அதைக் கேட்டு ராஜாங்கம், எல்லோருமே பதறுகிறார்கள். ஈஸ்வரி மட்டும் சந்தோஷப்படுகிறார். கருப்பு, உனக்கும் அந்த குழந்தைக்கும் தான் சம்பந்தமில்லை. எதற்காக குழந்தையை கேட்கிறார்? என்று சேது வம்பு இழுப்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த சேது, கருப்புவின் சட்டையை பிடித்து அது என்னுடைய குழந்தை தான் இது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று கத்துகிறார்.

சீரியல் ட்ராக்:

வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கம் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அப்போது கருப்பு, குழந்தை எங்கும் போகவில்லை. கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கிறது என்று சொல்கிறார். பின் மொத்த குடும்பமுமே கெஸ்ட் ஹவுஸ் போகிறார்கள். குழந்தையை பார்த்தவுடன் சேது எமோஷனலாக அழுகிறார். பின் குழந்தையை தன் கையில் தூக்கி கொஞ்சுகிறார். இதை பார்த்து ராஜாங்கம், கருப்பு எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full