போஸை பாடாய் படுத்தும் காவியா, ராஜாங்கம் எடுத்த முடிவால் கொந்தளிக்கும் தாமரை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் தன்னால் முடியாது என்றார். இருந்தாலும் காவியா கேட்கவில்லை. போஸை விரதம் இருக்க வைத்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தமிழுக்கு ஸ்கேன் செய்தார்கள். அப்போது ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை சேது பார்த்து விட்டார். அதை சேது, அப்பத்தா வெள்ளத்தாய் இடம் சொல்ல வந்தார். உடனே வெள்ளத்தாய், வாயை பொத்தி வெளியே அழைத்து சென்று நடந்த உண்மை எல்லாம் சேதுவிடம் சொன்னார். இதை கேட்டு சேது ரொம்ப சந்தோஷப்பட்டு தமிழை பார்த்தார்.
சேது, ஹாஸ்பிடலில் ஸ்கேனில் குழந்தையை பார்த்ததை பற்றி வீட்டில் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், இரட்டை குழந்தை என்பதை மட்டும் சொல்லவில்லை. ராஜாங்கம், சீக்கிரமாகவே தமிழுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.இன்னொரு பக்கம் காமேஸ் பிச்சையை எப்படியாவது தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்று தாமரை திட்டம் போட்டார்.
சின்ன மருமகள்:
பின் தாமரை, காமேஷ் பிச்சை இருவரும் போனில் நன்றாக பேசி இருந்தார். அப்போது தாமரையும் நிறைய பொய்களாக சொல்லி காமேஷிடம் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சேது, தமிழை மீண்டும் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார். தமிழ் எவ்வளவு சொல்லியும் சேது கேட்கவில்லை. கடைசியில் இது தமிழ் கண்ட கனவு. அதற்குப்பின் சேதுவை சந்தித்த தமிழ், இப்படியே என்னை பாசமாக பார்த்துக் கொள்வீர்களா? என்னை விட்டு போக மாட்டீர்கள் தானே, எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்றார். சேதுவும் சத்தியம் செய்து கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், தமிழ்ச்செல்விக்கு வளைகாப்பு செய்வதை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பத்தா, உன் மனதில் என்ன ஆசை இருக்கிறது என்று கேட்கிறார். தமிழ், அப்படி எதுவும் பெரிதாக இல்லை. எங்களுடைய திருமண நாளில் இலவசமாக 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது போல என்னுடைய வளைகாப்பிலும் கர்ப்பமாக இருக்கும் ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு செய்து சீர் கொடுக்க வேண்டும் என்கிறார். இதைக்கேட்டு ராஜாங்கமும் சரி என்கிறார். இன்னொரு பக்கம் தாமரை, காமேஷிடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது தாமரை எப்படியாவது காமேசை திருமணம் செய்ய வேண்டும் என்று சாவித்திரியிடம் சொல்கிறார். இன்னொரு பக்கம் போசை முருகருடைய மந்திரத்தை நூறு முறை சொல்ல வேண்டும் என்று காவியா சொல்கிறார். போஸ் மந்திரத்தை சொல்லும்போது பாதியிலேயே நிறுத்துகிறார். இதனால் காவியா, மீண்டும் முதலில் இருந்து மந்திரத்தை சொல்ல சொல்லி டார்ச்சர் செய்கிறார். அது மட்டும் இல்லாமல் போசை மந்திரம் முழுதாக சொல்ல விடாமல் குத்துப்பாடல்கள் எல்லாம் போட்டு விட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். இரு ஒரு பக்கம் ராஜாங்கம், தாமரைக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார்.