தாமரையின் சதி வலையில் சிக்கிய போஸ், காவியா எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்- சேது இருவருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நினைத்து பார்த்தார்கள். அதற்குப்பின் கருப்பன் போன் செய்து சேதுவை வரவைத்தார். பின் சேது, போஸ் கருப்பன் எல்லோருமே நன்றாக குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சேது, வண்டு கடிக்கு மருந்து எடுத்து வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பின் போஸ் வாயில் உண்மையை வரவைக்க ஒரு பொய்யான கதையை சொன்னார். இதை கேட்டு போஸ், நானும் நீங்க சொன்னது போல் பொடியை தூவி செடியிலிருந்து மருந்தை எடுத்து வந்தேன் என்றெல்லாம் பொய் சொன்னார்.
இதை கேட்டு சேதுவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பின் போஸ் மருந்தை எடுத்து வரவில்லை என்ற விஷயம் சேதுவிற்கு தெரிந்து விட்டது. அதற்குப்பின் தமிழை சந்தித்த சேது, மருந்து எடுத்துட்டு வர ரெண்டு பேரும் தான் போனோம். ஆனால், நான் வரும்போது நீ தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து கிடந்தாய். நீ மருந்து எடுத்தாயா? உனக்கு என்ன நடந்தது? என்றார். தமிழ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
தமிழ், நான் மருந்தை எடுத்து வந்தது உண்மை. ஆனால், என் தலையில் யாரோ பின்னாடி அடித்தது போல இருந்தது. போஸ் அடித்தானா? என்று எனக்கு தெரியாது. அதற்கு பிறகு தான் நீங்கள் என்னை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்தீர்கள் என்று சொன்னார. இதெல்லாம் போஸ் தான் செய்தார் என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. இன்னொரு பக்கம் போஸ் நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிற்கு துணி, நகைகளை எல்லாம் வர வைத்து எடுத்தார்கள். ஈஸ்வரி, அவருடைய மகளும் ரொம்ப காஸ்ட்லியான துணிகளை வாங்கினார்கள். வழக்கம் போல சாவித்திரிக்கும் தாமரைக்கும் ரொம்ப குறைவான விலையில் புடவையை கொடுப்பதால் அவர்கள் இருவருமே கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் தாமரை குளித்துவிட்டு தயாராகிக் கொண்டிருந்தார். இதை கதவு வழியாக போஸ் பார்த்தார். இதை கவனித்த தாமரை கதவை திறக்க, போஸ் ஏதேதோ சொல்லி சமாளித்தார். அது மட்டும் இல்லாமல் தாமரைக்கு போஸ் ரூட் விட்டார். இதை அறிந்து கொண்ட தாமரை, அம்மா இல்லாத நேரமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார். பின் போசை எப்படியாவது சிக்க வைத்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் தாமரை திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, இந்த கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் வர கூடாது, ஒழுக்கமாக இரு, மாட்டிக் கொள்ளாதே என்று போஸுக்கு அறிவுரை சொன்னார்.
https://www.youtube.com/watch?v=rfTvZvgo_vs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் போஸ்க்கு போன் செய்து தாமரை, வீட்டில் யாரும் இல்லை. ரூமுக்கு வாருங்கள் என்கிறார். அப்போது போஸ், தாமரையிடம் தப்பாக நடக்கப் போகிறார். தாமரை வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், போஸ் வரவில்லை. இதையெல்லாம் காவியா பார்த்து விடுகிறார். பின் காவியா, கல்யாணத்தை நாளை வைத்துக் கொண்டு இப்படி கேவலமாக நடந்து கொள்கிறாயே? என்று போசை திட்டுகிறார்.