கூலி வேலை செய்து கஷ்டப்படும் போஸ், காவ்யா சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 17/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தனம்-தமிழ் இருவரும் புரியாத மொழியில் பேசுவதால் சேது குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் காவியா, போஸை கிச்சனில் தூங்க சொன்னார். உடனே ஈஸ்வரி, உன்னை கெஞ்சி கேட்கிறேன். எதுவாக இருந்தாலும் ரூமுக்குள் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு காவியா, இதுதான் அவனுக்கு கொடுக்கும் தண்டனை. யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றார்.

காவியா, என்னுடைய விஷயத்தில் தலையிட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் மகன் தான் தண்டனை அனுபவிப்பான் என்று சொல்லி போசை திட்டி வெளியே அனுப்பி இருந்தார். ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டார். அதற்குப்பின் கல்லூரியில் விருது விழா நடப்பதால் ராஜாங்கம், சேது எல்லோருமே தயாராகி போனார்கள். பின் கல்லூரியில் கஷ்டப்பட்டு மக்களுக்காக மருந்து கொண்டு வந்ததற்காக சேதுவிற்கு விருது கொடுத்தார்கள்.

சின்ன மருமகள்:

அதற்குப்பின் எல்லா தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்த தமிழ் செல்விக்கும் விருது கொடுத்தார்கள். அதோடு கல்லூரி கட்டண செலவையும் ராஜாங்கம் ஏற்று கொண்டார் .அதற்குப் பின் ராஜாங்கம் சேது-தமிழ் இருவரையும் ரொம்ப பெருமையாக பேசி அவர்களுக்கு வாளை பரிசாக அளித்தார். அதற்கு பின் வீட்டில் சேது-தமிழ் இருவரையும் பேட்டி எடுத்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவியா சொன்னதால் போஸ் தன்னுடைய மாமனாரின் செங்கல் சூலையில் கூலி வேலை செய்கிறார். கஷ்டப்பட்டு போஸ் வேலை செய்வதை பார்த்து காவியாவின் அப்பா சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்- தனம் இருவரும் சேர்ந்து இருவரும் புரியாத மொழியில் பேசியதை மலர் மூலமாக சேது தெரிந்து கொள்கிறார். அதற்குப்பின் காவியா, தமிழை சந்தித்து பேசுகிறார். பின் போசை திருமணம் செய்ததற்கான காரணத்தை எல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். போஸ் வேலை செய்ததற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைக்கிறார் காவ்யா அப்பா. வீட்டிற்கு வந்த போஸ் நடந்தது எல்லாம் தன்னுடைய அம்மா, அக்காவிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது வந்த காவியா, கஷ்டப்பட்டு உழைப்பாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் தான் கொடுக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடணும் என்று நினைக்காதே என்றெல்லாம் திட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதை எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full