போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 23/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியை வேண்டும் என்று சேது வம்பு இழுத்து கொண்டே இருந்தார். ஆரத்தி எல்லாம் எடுத்து தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதால் ரொம்ப அலைச்சலாக இருக்கிறது படிக்கட்டு ஏற முடியவில்லை என்று தனத்திடம் புலம்பி கொண்டிருந்தார். இதை கேட்டு சேது, தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு மேலே போனார். நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் மீது சேதுவுக்கு காதல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ராஜாங்கம், அப்பத்தா சேர்ந்து ஜோசியரை வரவைத்து சேது- தமிழ் ஜாதகத்தை பார்க்க சென்றார்கள். அப்போது ஜோசியர், இந்த ஜாதகம் கொண்டவர்கள் சேர தான் போனார்கள். ஆனால், அதற்குள் சில சிக்கல்கள் இருக்கிறது. நான் சொல்லும் மூன்று பரிகாரங்களை செய்தால் எல்லாம் தீர்ந்து விடும். கோயிலில் வள்ளி திருமணம் நாடகம் நடத்துங்கள், இலவச அன்னதானம் போடுங்கள். ரெண்டு பேரும் சேர்ந்து நன்றாக வாழ்வார்கள் என்றார். ராஜாங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இன்னொரு பக்கம் சேது தங்களுடைய திருமண நாள் பற்றி சொன்னார்.

சின்ன மருமகள்:

தமிழ் அதை பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் போஸ் நிறைய குடித்துவிட்டு காவியா ரூமிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தார். உடனே அங்கு வந்த ஈஸ்வரி, அமைதியாக இரு போஸ் என்றார். ஒரு கட்டத்தில் போஸ், இவ்வளவு நாள் நீ கண்டிஷன் போட்டாய். இனி நான் போடுகிறேன். நீ புடவை தான் கட்ட வேண்டும். வெளியே போகக்கூடாது. நான் சொல்லும் பேச்சை தான் கேட்க வேண்டும். இது என்னுடைய கேரக்டரே கிடையாது என்று எல்லா உண்மையும் சொன்னார். இதையெல்லாம் கேட்டு காவியாவிற்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ் குடித்துவிட்டு ஓவராக பேசியதால் காவியா, உங்கள் மகனை இங்கே தூங்கிக் கொள்ள சொல்லுங்கள். நான் என்ன செய்கிறேன் பார் என்று போஸ் குடித்து வைத்த சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே சேர் போட்டு உட்காருகிறார். இதை பார்த்து அப்பத்தாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே வெளியே வந்து காவியா கையில் சரக்கு கிளாஸ்மாக இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்கள். பின் வீட்டில் எல்லோரும், என்னாச்சு? ஏன் இப்படி செய்கிறாய்? என்றெல்லாம் கேட்கிறார்கள். உடனே காவியா, போஸ் செய்ததை எல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் ஈஸ்வரி, போஸ்க்கு சப்போர்ட் செய்ததையும் சொல்கிறார். இதனால் கொந்தளித்த ராஜாங்கம், போசை திட்டி விட்டு காவியா சொல்வதை செய்து தான் ஆகணும் என்று அங்கிருந்து செல்கிறார். போஸ்-ஈஸ்வரி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து ஜோசியர் சொன்னது போல தமிழ்-சேது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பேசுகிறார். இதைக் கேட்டு சாவித்திரி- ஈஸ்வரி இருவருக்கும் கடுப்பாகிறது. பின் தமிழ், ராஜாங்கம் சொன்னதால் திருமண நாளை கொண்டாடுவதற்கு ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, காவியா சொல்வதை கேட்டு நடந்து கொள் என்றெல்லாம் போஸுக்கு அறிவுரை சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full