மலரிடம் காவியா சொன்ன வார்த்தை, சந்தோசமாக திருமண நாளை கொண்டாடும் சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், போசை திட்டி விட்டு காவியா சொல்வதை செய்து ஆகணும் என்று அங்கிருந்து சென்றார். போஸ்-ஈஸ்வரி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து ஜோசியர் சொன்னது போல தமிழ்-சேது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு சாவித்திரி- ஈஸ்வரி இருவருக்கும் கடுப்பானது. பின் தமிழ், ராஜாங்கம் சொன்னதால் திருமண நாளை கொண்டாடுவதற்கு ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, காவியா சொல்வதை கேட்டு நடந்து கொள் என்றெல்லாம் போஸுக்கு அறிவுரை சொன்னார்.
ஈஸ்வரி, எப்படியாவது காவியாமிடம் இருந்து பணத்தை எல்லாம் வாங்க வேண்டும். அதற்காக பொறுத்துக் கொண்டு இரு என்றார். இதனால் போஸ் கோபத்தை குறைத்துக் கொண்டார். பின் காவியாவிடம் சென்று போஸ் மன்னிப்பு கேட்டார். ஆனால், காவியா நம்பவில்லை. இருந்தாலும் போசை திட்டி விட்டு வேலைக்கு கிளம்ப சொன்னார். இன்னொரு பக்கம் கருப்பன்- சேது இருவரும் ஊரில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். பின் சேது, தன்னுடைய மாமனார் மாமியாருக்கு போன் செய்து திருமண நாளை கொண்டாடும் விஷயத்தைப் பற்றி சொன்னார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி இருவரும் திருமணம் செய்து வைக்கும் ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசை எல்லாம் பற்றி புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது சாவித்திரி, நம்முடைய பக்கம் இரண்டு ஜோடிகளை தயார் செய்து அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இதை காவியா கேட்டு விட்டார். இன்னொரு பக்கம் சேது, திருமண நாளிற்க்காக தமிழுக்கு பரிசு கொடுப்பதற்காக ரூமில் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி, உள்ளே வந்து விட்டார். பின் சேது, புது புடவை ஒன்று வாங்கி கொடுத்தார். அதை பார்த்து தமிழ்ச்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, புடவை நகை வளையல் என எல்லாமே திருமண நாளுக்காக வாங்கி தருகிறார். தமிழ்செல்வி எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொள்கிறார். இதனால் சேதுவிற்கு ஒரே சந்தோசம். இன்னொரு பக்கம் போஸ், செங்கல் சூளைக்கு சென்று அங்கிருக்கும் ஒரு நபரை பணம் கொடுத்து கரெக்ட் பண்ணி கொள்கிறார். பின் சேது, நான் வேலை செய்ய மாட்டேன். எம்எல்ஏ வரும்போது மட்டும் எனக்கு சிக்னல் கொடு என்று சொல்வதால் அந்த நபருமே ஒத்துக்கொள்கிறார். பின் போஸ் ஜாலியாக போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். எம்எல்ஏ வந்தவுடன் வேலை செய்வது போல நடித்து பாசாங்கு செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மலர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது காவியா காரை நிறுத்தி மலரிடம் பேசுகிறார். மலர்- காவியா இருவருமே ரொம்ப ஜாலியாக நண்பர்கள் போல பேசி கொள்கிறார்கள். பின் இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வருவதை பார்த்து தமிழுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது காவியா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்வதால் தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் 12 மணி ஆவதால் சேது, தமிழ்செல்வியை எழுப்பி திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்ட அழைக்கிறார். வீட்டில் எல்லோருமே தமிழ் செல்வி-சேது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். வழக்கம் போல ஈஸ்வரி- சாவித்திரி இருவரும் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.