காவியா போட்ட கண்டிஷனால் ஆடிப்போன போஸ், சேது கண்ட கனவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் திருமணம் முடிந்த உடனே காவியா, தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்துவிட்டு இங்கு கொண்டு வந்த சீர்வரிசைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போங்க. இந்த சொத்துக்காக தானே இவன் என்னை கல்யாணம் செய்து கொண்டான். ஆனால், இது எதுவுமே அவனுக்கு கிடைக்கக்கூடாது என்றார். உடனே பதறிப் போன ஈஸ்வரி, அதெல்லாம் முடியாது. இங்கே இருக்கணும் என்றார். அதற்கு காவியா, இப்ப இதுதான் ட்ரெண்டு. இங்க ஒரு முடி தேங்காய் கூட இருக்கக் கூடாது என்றார்.
ராஜாங்கம், காவியா சொல்வதை ஏற்றுக் கொண்டார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் ராஜாங்கம், சேது-தமிழ் இருவருக்குமே நன்றி சொல்லி எமோசனலாக பேசினார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி- சித்ரா இருவரும் சீர்வரிசை பறிபோனது நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். இதை பார்த்து தாமரை, சாவித்திரி இருவரும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் அப்பத்தா, தமிழ்ச்செல்வி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றியதற்காக மன்னிக்க சொல்லி கேட்டார். சேது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சின்ன மருமகள்:
சேது, தமிழ் இடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்தார். பின் தமிழை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து எமோஷனலாக சேது அழுது கொண்டு தன்னுடைய காதலை சொன்னார். ஆனால், அதற்கு பிறகு தான் தெரிகிறது அது சேது உடைய கனவு. பின் சேதுவின் மனசாட்சி தமிழிடம் காதலை சொல்ல போனார். ஆனால், சேது மன்னிப்பு மட்டும் கேட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் ராஜாங்கத்தின் தம்பி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். ஈஸ்வரி திமிராக யாரிடமும் மன்னிப்பு கேட்காமல் நின்று கொண்டிருந்தார். அதற்குப்பின் போஸ், தன் மீது தவறு இல்லாதது போல பேசி இருந்தார். காவியா, என்னை ஏமாற்றியதற்கு உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவியா, உனக்கு பெரிய தண்டனையா கொடுக்கணும். நீ நல்லவன் என்று என் மனதிற்கு தோன்றும் வரை இந்த ரூமில் இருக்கவே கூடாது. கிச்சனில் தான் தூங்கணும். யாராவது கேட்டாலும் காவியா மேடம் சொன்னார்கள் என்று சொல் என திட்டி அனுப்புகிறார். வேறு வழியில்லாமல் போஸ் கிச்சனில் தூங்குகிறார். இதை பார்த்து சாவித்திரி- தாமரை இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரி கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் சேது, தமிழ் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது சேதுவின் கனவில் தமிழ் டாக்டர் ஆகிவிடுகிறார். சேது ராஜாங்கம் இடத்திற்கு வந்து விடுகிறார். பின் தன் மகன் வளர்ந்து பெரியாளாகியிருக்கிறார். மகள் கல்லூரி படிக்கிறார். பின் சேது- தமிழ் இருவரும் சந்தோசமாக பாட்டு பாடி இருக்கிறார்கள். இதையெல்லாம் சேது கனவில் பாடுவது போல் நிஜத்திலும் பாடி சந்தோசப்படுகிறார். இதை பார்த்த தனம், சேதுவை எழுப்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது