போஸிற்கு காவியா கொடுக்கும் தரமான தண்டனை, தமிழ்செல்வி மனம் மாறுவாரா? சின்ன மருமகள்

By subhashini · 22/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் இன்னும் திருந்தாமல் செங்கல் சூழலில் வேலை செய்யும் பெண்ணுடன் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த காவியா, இனிமேல் நீங்கள் கிச்சனில் தூங்க தேவை இல்லை. ரூமில் தூங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதைக் கேட்டு போஸ் எதுவும் சொல்லாமல் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரை, எனக்கு வசதியான நிறைய சொத்து இருக்கிற மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் கண்டிஷன் போட்டார்.

மலர், நீங்கள் விவாகரத்தை வாபஸ் வாங்கி விட்டால் தமிழ் இங்கிருந்து போக மாட்டாள். ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்று ஐடியா தந்தார். இதை சேது, அப்பத்தாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் போஸ், செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண் உடன் கடலை போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அந்தப் பெண் காவியா வைத்த ஆள் தான். அந்த பெண், போஸ் உடன் பேசும் வீடியோவை எல்லாம் காவியாவிற்கு அனுப்பி விட்டார். காவியா, அதை ஈஸ்வரிடம் காண்பித்து போஸின் முகத்திரையை கிழித்தார்.

சின்ன மருமகள்:

ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் காவியா, ஈஸ்வரி இருவரும் செங்கல் சூலைக்கு சென்றார்கள். அங்கு போஸ் செய்த வேலை எல்லாம் சொல்லி காவியா திட்டி அசிங்கப்படுத்துகிறார்.
கோபத்தில் ஈஸ்வரி, போசை அடி வெளுத்து வாங்கினார். இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய வக்கீலிடம் விவாகரத்து கேஸை வாபஸ் வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். வக்கீல், இது நல்ல முடிவு தான் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வக்கீல், நீங்கள் வாபஸ் வாங்குவதுபோல உங்கள் மனைவியும் கோர்ட்டில் வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லணும். அப்படி என்றால் தான் இந்த கேஸ் தள்ளுபடி ஆகும் என்று சொல்கிறார். இதனால் சேது கொஞ்சம் தயங்கி நிற்கிறார். அதற்குப்பின் சேது, கேஸை வாபஸ் வாங்கின விஷயத்தை அறிந்த தமிழ்செல்வியின் அம்மா, தமிழுக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். பின் சேதுவையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார். ஆனால், தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, சித்ரா இருவரும் போஸ் செய்தது தவறு இல்லை என்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்ட காவியா, போஸ் இப்படி திருந்தாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்று திட்டி விடுகிறார். அதற்குப்பின் போஸுக்கு சரியான தண்டனை கொடுக்கணும் என்று காவியா, போஸ், ஈஸ்வரி, சித்ரா மூவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு போகிறார். அங்கு போஸின் தலையில் தண்ணியை ஊற்றி பச்சை கலர் துணியை போட சொல்கிறார். போஸும் காவியா சொல்வது போல செய்கிறார் .பின் அங்கிருந்த சாமியார் கையில் வேல் இருக்கிறது. அதைப் பார்த்த போஸ், என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full