சாவித்திரியின் முகத்திரையை கிழித்த காவியா, ராஜாங்கம் சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மலர்- காவியா இருவருமே ரொம்ப ஜாலியாக நண்பர்கள் போல பேசி கொண்டார்கள். பின் இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வருவதை பார்த்து தமிழுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது காவியா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்வதால் தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் 12 மணி ஆவதால் சேது, தமிழ்செல்வியை எழுப்பி திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்ட அழைத்தார். வீட்டில் எல்லோருமே தமிழ் செல்வி-சேது திருமண நாளை கொண்டாடினார்கள்.
வழக்கம் போல ஈஸ்வரி- சாவித்திரி இருவரும் பயங்கர கடுப்பில் இருந்தார்கள். சேது, தன்னுடைய முதல் திருமண நாளை நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தயாராகுவதற்காக வந்தார். உடனே சேது, இன்று முழுவதும் உனக்கு என்ன தேவையோ அது நான் தான் செய்வேன் என்று தமிழ் செல்விக்கு தலை துவட்டி விடுவது, நகை, புடவையை போடுவது என்று எல்லா வேலையும் செய்தார். தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார்.
சின்ன மருமகள்:
வீட்டில் எல்லாம் தமிழ்-சேதுவின் திருமண நாளுக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. பின் தமிழ்-சேது இருவரும் ஜோடியாக வந்தார்கள். அதை பார்த்து அப்பத்தா-ராஜாங்கம் சந்தோசப்பட்டார். பின் பத்து ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். கோயிலில் திருமண ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசியை பார்த்து ஈஸ்வரி, சாவித்திரி இருவரும் வாயை பிளந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோயிலில் தமிழ்-சேது திருமண நாளை முன்னிட்டு கோலாகலமாக 10 ஜோடிகளுக்கான இலவச சீர்வரிசைகள் இறங்கி இருக்கிறது.10 ஜோடிகளையும் திருமணம் செய்து வைப்பதற்கு கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். அதில் இரண்டு ஜோடிகள் தாமரை- சாவித்திரி ஏற்பாடு செய்து வைத்த நபர்கள். எட்டு ஜோடிகளுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிகிறது. சேது- தமிழ் இருவரும் தான் நடத்தி வைக்கிறார்கள். சாவித்திரி அனுப்பிய இரண்டு ஜோடிகள் வந்து நிற்கும்போது காவியா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். எல்லோருமே ஷாக் ஆகி காவியாவை கேள்வி கேட்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது காவியா, இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. சீர்வரிசைக்கு ஆசைப்பட்டு தான் சாவித்திரி- தாமரை இருவரும் இப்படி செய்தார்கள் என்று எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். இதனால் ராஜாங்கம் பயங்கர கோபப்படுகிறார். அப்பத்தா, சாவித்திரி- தாமரையை திட்டி கோயிலை விட்டு வெளியே போக சொல்கிறார். பின் காவியா, நீங்கள் பயப்பட தேவையில்லை. இரண்டு வசதி வாய்ப்பற்ற ஜோடிகளை அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். ராஜாங்கம், காவியாவிற்கு நன்றி சொல்கிறார். ஈஸ்வரி, இதுதான் சந்தர்ப்பம் என்று காவியாவை புகழ்ந்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது