தாமரை விரித்த வலையில் வசமாக சிக்கிய போஸ், கோபத்தில் கொந்தளிக்கும் காவியா - சின்ன மருமகள்

By subhashini · 19/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் மருந்தை எடுக்கவில்லை என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. பின் இதைப்பற்றி சேது தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அண்ணன், வீட்டில் உண்மையை சொல்லலாம் என்றார். அதற்கு சேது, அப்பா நம்ப மாட்டார். ஆதாரத்துடன் அப்பாவிடம் சொல்லணும் இல்லையென்றால் சித்தியே பழைய பகையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனை எழுப்புவார்கள் என்றார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் அண்ணன் மகள், தங்கை மகன் இருவருமே போஸ் திருமணத்திற்காக வந்திருந்தார்கள்.

அவர்கள் மாடன் உடையில் இருப்பதால் அப்பத்தா திட்டினார். பின் வீட்டில் உள்ள எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு ஈஸ்வரி, அவர்கள் இருவருக்கும் வீட்டை சுத்தி காண்பிக்கிறார். அதற்குப்பின் சேது, புதிய ஸ்பீக்கரை வாங்கி வந்து வீட்டில் வைத்தார். அதில் இனிமையான பாடல்களை எல்லாம் போட வைத்தார். இதைப்பற்றி தனம், மலர் இருவரும் அந்த பொருள் கொண்டு வந்த நபர்களிடம் விசாரித்தார்கள். அதற்கு அந்த நபர், தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர் ஸ்பீக்கர் வேண்டும் என்று கேட்டார். அதுவும் இனிமையான பாடல்கள் அதில் இறக்கி கொடுக்க சொன்னார்.

சின்ன மருமகள் சீரியல்:

அதனால்தான் நாங்களும் கொண்டு வந்து வைத்தோம் என்று சொன்னவுடன் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்குப் பின் தாமரை, தன்னிடம் போஸ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சாவித்திரி பயங்கரமாக கோவப்பட்டார். அதற்கு தாமரை, போஸை கையும் களவுமாக மாட்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த வைக்க வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. நீ காவியா உடைய போன் நம்பரை மட்டும் எப்படியாவது எடுத்து வந்து விடு என்றார்.
அதற்கு சாவித்திரி, ஈஸ்வரி போனில் நம்பரை எடுக்கப் போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரை, போன் செய்து போஸை ரூமிற்கு அழைக்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, சாவித்திரி சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து என்னமோ நடக்கப் போகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழ் நடந்து கொண்டதை பற்றி ஜெனி கேட்கிறார். அதற்கு தமிழ், என் எங்கு பார்த்தாலும் என் கணவர் ஞாபகமாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ஜெனி, இதுக்கு பெயர்தான் காதல் என்று தமிழை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவியா, சேதுவின் வீட்டிற்கு வந்து விடுகிறார். இதை அறிந்த தாமரை, போஸிடம் நடிக்கிறார். போஸ், தாமரிடம் நெருக்கமாக போக பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே தாமரை, இதெல்லாம் தவறு. வேண்டாம், உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்றெல்லாம் நடிக்கிறார். ஆனால், போஸுக்கு காவியா வந்திருப்பது தெரியாமல் திருமணத்தை பற்றியும் காவியாவை பற்றியும் கேவலமாக பேசிக்கொண்டு தாமைரிடம் நெருக்கமாக போகிறார். உடனே கோபத்தில் காவியா ரூமிற்குள் வந்துவிடுகிறார். போசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பயத்தில் உளறுகிறார். கோபத்தில் காவியா, போஸை அடித்துவிட்டு இவ்வளவு கேளாமகேவலமானவனா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதையெல்லாம் பார்த்து தாமரை-சாவித்ரி இருவருக்குமே சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய குழந்தைக்காக தான் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full