போஸின் மீது நம்பிக்கை வைக்கும் காவ்யா, சாவித்ரியிடம் தாமரை போட்ட கண்டிஷன் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, உன் மனதில் காதல் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது என்றெல்லாம் போதையில் உளறினார். இதை அறிந்த தமிழ்செல்வி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் குடித்துவிட்டு ஆடுவது எனக்கு என்ன புதிதா? நீங்கள் என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று சென்று விட்டார். அதற்குப்பின் மலைவாழ் கிராமத்தில் இருந்து சில பேர் ராஜாங்கம் வீட்டிற்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அப்போது ஈஸ்வரி, அந்த சாமியாடி பெண்ணை பார்த்து உங்களிடம் கேள்வி கேட்கணும் என்றார்.
சேது, மூப்புத்தாய் சொன்னதையே நினைத்து பார்த்தார். தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதை சேது முழுமையாக உணர்ந்து விட்டார். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்தார். பின் ஈஸ்வரி, சாவித்ரி இடம் ராஜாங்கம், இனிமேல் நீங்கள் இருவரும் சேது- தமிழ் விஷயத்தில் தலையிடக்கூடாது. அவர்களுக்கு மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்றெல்லாம் எச்சரித்தார். ஈஸ்வரி, சாவித்திரியால் எதுவுமே பேச முடியவில்லை. ராஜாங்கம் ரொம்பவே கடுமையாக பேசி விட்டார். அதற்குப்பின் சேது- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சின்ன மருமகள்:
அப்போது தமிழ், பொது வெளியில் தன்னை அசிங்கப்படுத்தியதை சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார்.
இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி, சித்ரா-ஈஸ்வரி நான்கு பேருமே தமிழ்செல்வி முன்பு ராஜாங்கம் தங்களை அவமானப்படுத்தியது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதோடு தமிழ்செல்வியை வீட்டை விட்டு அனுப்ப மீண்டும் சதி திட்டம் போட்டார்கள். கடைசியில் போஸ் செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்ணை கரெக்ட் செய்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டிற்கு வந்த தரகர், தாமரைக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கும் விஷயமாக சாவித்ரியிடம் பேசுகிறார். சாவித்திரி, நிறைய வசதி உள்ள பணக்கார மாப்பிள்ளை மட்டும் காட்டுங்கள் என்று சொல்கிறார். ராஜாங்கம், நீ சொல்வது ரொம்ப தவறு சாவித்திரி. நல்ல குணமுள்ள மாப்பிள்ளை தான் வேண்டும். தாமரைக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து தருகிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சாவித்திரி-தாமரை இருவரும் கொந்தளிக்கிறார்கள். இன்னொரு பக்கம் சேது, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். தமிழ் மன்னிக்க முடியாது என்று சொல்லி விடுகிறார்
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காவியா, தன்னுடைய அப்பா- அம்மா போஸை பற்றி சொன்னது எல்லாம் நினைத்து மனம் மாறுகிறார். ஆனால், போஸ் இன்னும் திருந்தாமல் செங்கல் சூழலில் வேலை செய்யும் பெண்ணுடன் போனில் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த காவியா, இனிமேல் நீங்கள் கிச்சனில் தூங்க தேவை இல்லை. ரூமில் தூங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதைக் கேட்டு போஸ் எதுவும் சொல்லாமல் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் தாமரை, எனக்கு வசதியான நிறைய சொத்து இருக்கிற மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் கண்டிஷன் போடுகிறார்.