ராஜாங்கம் கொடுத்த செக், மலரிடம் தவறாக நடக்கும் போஸ், அடுத்து என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 10/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மலர், என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவரை பற்றி எனக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறேன். நான் மேற்கொண்டு படித்து வக்கீல் ஆகப் போகிறேன் என்றார். இதை கேட்டு தமிழ் செல்வி கைதட்ட, போஸ் அக்காவிற்கு பயங்கர கடுப்பானது. தமிழ்ச்செல்வி, நீங்கள் எடுத்தது சரியான முடிவு என்றார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி ஹோட்டலில் வேலை முடித்துவிட்டு வருவதற்குள் பஸ் மிஸ் ஆகி விடுவதால் கல்லூரிக்கு நடந்து போனார். இதை பார்த்த சேது, தமிழ்செல்வியை தன்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றார்.

எம்எல்ஏ, திருமணத்திற்கு முன்பு போஸுக்கு கார் வாங்கி தர இருப்பதால் ராஜாங்கம் வீட்டிற்கு வந்து மாடல்களை எல்லாம் காண்பித்து இருந்தார். அப்போது போஸ், 50 லட்சம் மதிப்புள்ள கார் தான் வேண்டும் என்றார். இதை கேட்டு தாமரை- சாவித்திரி வாய் அடைத்துப் போனார்கள். ஈஸ்வரிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பின் கல்லூரியில் தமிழ்ச்செல்வி முதல் மதிப்பெண் எடுத்ததால் எம்எல்ஏ ஸ்காலர்ஷிப் தர ஒத்துக்கொண்ட விஷயத்தை கல்லூரி ஆசிரியர் சொன்னார். இதைக் கேட்டு தமிழ் செல்விக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

சின்ன மருமகள் சீரியல்:

இன்னொரு பக்கம் சேது, ரேடியோவை சரி செய்து பாட்டு கேட்டு கொண்டிருந்தார். அதில் வரும் குழந்தை சம்மந்தப்பட்ட பாடலை கேட்டு பழைய விஷயத்தை சேது நினைத்துப் பார்த்தார். அப்போது தமிழ்ச்செல்வி, படித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றில் குழந்தையின் அசைவு தெரிவதால் மலர், தனத்திடம் அழைத்துக் காண்பித்தார். இதை பார்த்த சேதுவிற்குமே குழந்தையின் அசைவை பார்க்க ஆசைப்பட்டார். பின் தமிழ் துங்கிய பிறகு சேது, தமிழ்ச்செல்வியின் வயிற்றில் கை வைத்து பார்த்தார். குழந்தை அசைவை உணர்ந்தவுடன் சேது தன்னை அறியாமல் அழுதார். பின் வயிற்றில் காது வைத்து கேட்டு ரொம்ப எமோஷனலாக அழுதார். இது எல்லாம் தமிழ்ச்செல்வி பார்த்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், போஸின் திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி ரூபாய் செக் போட்டு கொடுக்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி, போஸ் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரியின் கணவர், இப்போதைக்கு செக் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி கேட்காமல் செக்கை வாங்க வருகிறார். உடனே அப்பத்தா, அவர்கள் தொலைத்து விடுவார்கள். பத்திரமாக நான் வைத்திருக்கிறேன் என்று செக்கை வாங்கி கொள்கிறார். இதற்கு ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. அதற்குபின் சேது, நீ புதிதாக தொழில் தொடங்குவதற்கு பணம் பத்தவில்லை என்றால் என்னிடம் சொல். நான் லோன் போட்டு வாங்கி தருகிறேன்.

சீரியல் ட்ராக்:

நீ எனக்கு வட்டி தரவேண்டாம். அசல் தந்தால் மட்டும் போதும் என்று சொல்கிறார். ஆனால், போஸ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கல்லூரியில் ஜெனி, தன்னுடைய வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது வந்த ஜெனியின் காதலர் ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே ஜெனியால் முடியவில்லை. பின் தமிழிடம் ஜெனியை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு காதலர் அங்கிருந்து செல்கிறார். அதற்குப்பின் வீட்டில் மலர் தனியாக இருப்பதை பார்த்த போஸ் அவரிடம் தப்பாக நடந்து கொள்ள உள்ளே வருகிறார். பின் போஸ் ரொம்ப காதலாகவும் அன்பாகவும் மலரிடம் பேசுகிறார். ஆனால், மலர் கோபப்பட்டு போசை தள்ளி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full