அவசர அவசரமாக நடக்கும் போஸ் திருமணம், மலர் எடுத்த அதிரடி முடிவு - சின்ன மருமகள்

By subhashini · 6/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் செல்வி, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன், தயவுசெய்து நீங்கள் மேற்கொண்டு படியுங்கள் என்று உத்வேகம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி என் மகனை மேனேஜரில் இருந்து முதலாளி ஆக்க முடியாதா? என்றெல்லாம் கேட்டார். இதைக் கேட்டு ராஜாங்கம், திருமணத்திற்கு முன்பு உன் மகனுக்கு ஒரு கோடி ரூபாயில் செக் தருகிறேன். அதை வைத்து சொந்தமாக தொழில் செய்துகொள் என்றார். ஈஸ்வரி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். போஸ், தமிழ்செல்வியை சந்தித்து ராஜாங்கம் ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னதை சொல்கிறார்.

இதை கேட்ட தமிழ்செல்வி, நீ உன்னுடைய ஆணவத்தாலே அழியப் போகிறாய். என்னை அடித்து விட்டு தான் நீ மருந்து கொண்டு வந்த விஷயம் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் வீட்டில் சொல்லவில்லை. உனக்கான அழிவு காலம் நெருங்கி விட்டது என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு போஸ், நான் கல்யாணம் செய்து கோடீஸ்வரனாக தான் வாழ போகிறேன் என்கிறார். அதற்கு தமிழ், உனக்கு அந்த கல்யாணமும் நடக்காது, ஒரு கோடி ரூபாய் பணமும் கிடைக்காது என்றெல்லாம் சவால் விடுகிறார். அதற்குப்பின் போஸ், ராஜாங்கம் கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பற்றி காவியா விடம் சொல்கிறார்.

சின்ன மருமகள் சீரியல்:

காவியா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிண்டல் செய்கிறார். அதற்குப்பின் காவியா அனுப்பிய நர்ஸ் சில டெஸ்ட்களை எடுத்தார்கள். ஈஸ்வரிக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் இடி மின்னல் இருப்பதால் தமிழ்செல்வி, சேதுவை உள்ளே தூங்க சொன்னார். பின் தமிழ்-சேது இருவரும் நெருக்கமாக இருப்பது போல கனவு காண்கிறார்கள். பின் டெஸ்ட் முடிந்ததுமே காவியா போன் செய்து, உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் அதிகமாக குடிப்பது போல தெரிகிறது என்று கேட்டவுடன் போஸ் தடுமாறி நின்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ், நான் இனிமேல் குடிப்பதை குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். பின் காவியா, நமக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடக்க இருக்கிறது. வீட்டில் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் ராஜாங்கம், வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து போஸ்-காவியா திருமணம் மூன்று நாட்களில் நடக்க இருக்கிறது. எல்லோருமே திருமண வேலையில் இருக்கிறார்கள். அதற்குப்பின் போஸ் அக்கா, மலரை வெறுப்பேற்றுவதற்காக போஸ் திருமணத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை கேட்ட மலர், என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவரை பற்றி எனக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறேன். நான் மேற்கொண்டு படித்து வக்கீல் ஆகப் போகிறேன் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு தமிழ் செல்வி கைதட்டுகிறார். போஸ் அக்காவிற்கு பயங்கர கடுப்பாகிறது. தமிழ்ச்செல்வி, நீங்கள் எடுத்தது சரியான முடிவு என்று சொல்கிறார். அதற்கு மலர், உன்னால்தான் நான் இந்த முடிவு எடுத்தேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி ஹோட்டலில் வேலை முடித்துவிட்டு வருவதற்குள் பஸ் மிஸ் ஆகி விடுவதால் கல்லூரிக்கு நடந்து போகிறார். இதை பார்த்த சேது, தமிழ்செல்வியை தன்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full